திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அண்ணாச்சி நடிக்கும் புதிய படம்.. இந்த தடவ மிஸ் ஆகாது

லெஜண்ட் சரவணன் தனது முதல் படத்திலேயே கமர்ஷியல் ரீதியான வெற்றியை பெற்றுள்ள நிலையில் இவர் அடுத்து நடிக்க உள்ள திரைப்படத்தின் அப்டேட்கள் வெளியாகி உள்ளது. இயக்குனர்களான ஜேடி மற்றும் ஜெர்ரி இயக்கிய லெஜெண்ட் திரைப்படத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனரான சரவணன் நடித்துள்ளார்.

மேலும் பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌட்டேலா, விவேக் உள்ளிட்ட பலர் நடித்த தி லெஜன்ட் ரிலீஸாவதற்கு முன்பே பல விமர்சனங்களை பெற்றிருந்த நிலையில், சமீபத்தில் திரையரங்குகளில் தி லெஜன்ட் ரிலீசாகி கமர்ஷியல் ரீதியான வெற்றியைப் பெற்றுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் வெளியான அணைத்து பாடல்களும் ஹிட்டடித்துள்ளது.

லெஜண்ட் சரவணன் தயாரித்த தி லெஜன்ட் ரிலீசாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்றுவருகிறது. மேலும் இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும் திரையரங்குகளுக்கு சென்று குடும்பமாக பலரும் பார்த்து வருகின்றனர்.

படத்தின் கதை நன்றாக உள்ளதாகவும், படத்தில் எடுக்கப்பட்ட காட்சிகள் பிரமாண்டமாக உள்ளதாகவும் நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கும் வேளையில், லெஜண்ட் சரவணனின் நடிப்பு ரோபோட் போன்று உள்ளதாக நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் மீம்ஸுகளை போட்டு தாளித்து வருகின்றனர்.

இதனிடையே லெஜண்ட் திரைப்படத்தில் கிடைத்த விமர்சனங்களை மனதில் வைத்துக் கொண்டு தனது அடுத்த திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்த உள்ளதாக லெஜெண்ட் சரவணன் தெரிவித்துள்ளார். சரவணன் 50 வயதை தாண்டிய நிலையில், இளைஞர்களை போல் தொடர்ந்து பல படங்களில் நடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படுகிறது..

இந்நிலையில் இவரின் அடுத்த திரைப்படத்தையும் இவரே தயாரிக்கப் போவதாகவும், புதுமுக இயக்குனர் இயக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது. மேலும் கூடுதல் அப்டேட் கூடிய விரைவில் லெஜண்ட் சரவணன் தரப்பிலிருந்து வெளியாகும் என்றும் பலரும் எதிர்பார்க்கின்றனர்.

Trending News