புதன்கிழமை, ஜனவரி 15, 2025

30 வருட சினிமாவில் அஜித் செய்யாததை முதல் படத்திலேயே செய்த சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.. வேற மாதிரி வராப்புல!

அஜித் தமிழ் சினிமாவில் அடியெடுத்து வைத்த கிட்டத்தட்ட முப்பது ஆண்டுகள் நிறைவடைந்த நேரத்திலும் இன்னமும் ஒரு காரியத்தை செய்யாமல் தள்ளிப் போட்டுக் கொண்டே இருக்கிறார். ஆனால் அதை முதல் படத்திலேயே செய்கிறாராம் சரவணா ஸ்டோர் அண்ணாச்சி.

சினிமாவைப் பொறுத்தவரையில் காசு இருந்தால் ஹீரோவாகலாம் என்ற நிலைமைதான். ஆனால் அப்படி வந்த நிறைய பேர் சுவடு தெரியாமல் அழிந்து விட்டனர். ஒரு சிலர் மட்டுமே சினிமாவுக்கு உண்மையாக இருந்து உயர்ந்து நிற்கின்றனர்.

அந்த வகையில் மிகப்பெரிய தொழிலதிபரான சரவணா ஸ்டோர் உரிமையாளர் சரவணன் அருள் என்பவர் தற்போது ஹீரோவாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌடலா என்பவர் நடித்து வருகிறார்.

கிட்டத்தட்ட முப்பது கோடி பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்புகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கும் இந்த படத்தை ஜேடி-ஜெர்ரி என்ற இரட்டையர்கள் இயக்கி வருகின்றனர்.

அஜித் தற்போது வரை பான் இந்தியா படம் நடித்ததே கிடையாது. அடுத்ததாக அவர் நடிக்கும் வலிமை படம் தான் அஜித் சினிமா வரலாற்றில் முதல் பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

ஆனால் அண்ணாச்சி சினிமாவில் என்ட்ரி கொடுக்கும் முதல் படத்தையே ஐந்து மொழிகளில் வெளியிட திட்டமிட்டுள்ளாராம். முதல் படத்திலேயே உச்சத்தைத் தொட்டு விட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம் சரவணன் அருள்.

saravana-store-annachi-cinemapettai
saravana-store-annachi-cinemapettai

Trending News