திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அசிங்கப்பட்டதால் வந்த சினிமா ஆசை.. எவ்வளவு கேலி கிண்டல் செய்தாலும் சாதித்து காட்டிய அண்ணாச்சி

சரவணா ஸ்டோர் அண்ணாச்சி அவர்களை அறியாதவர்களும், கிண்டலடிக்கதவர்களும் இல்லை. காரணம் இவர் விளம்பரப்படங்களில் நடித்தது அடுத்து சினிமா ஆசையினால் பிரம்மாண்டமாக ஒரு திரைப்படத்தை தயாரித்து நடித்துள்ளார். ஆனால் இவர் இந்த 50 வயதில் நடித்தது பலரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. இவருக்கு பேரன் பேத்திகள் கூட இருக்கிறார்கள்.

இவர் நடிக்க வந்தது தற்செயலாக நடந்த விஷயம், இவர் கடையின் விளம்பரத்தில் நடிக்க ஒரு நடிகரிடம் கால்ஷீட் கேட்டு அதற்காக காத்திருந்து கடைசியில் அசிங்கபட்டதன் விளைவு இவரே நடிக்க வந்துவிட்டார். பின்னர் விளம்பரப் படங்களில் நடித்தார், அதன் மூலம் அவரது கடையின் வருமானமும் அதிகரித்தது என்பது உண்மை.

அதன் விளைவாக சினிமாவில் நடித்தால் என்ன என்ற ஆசையில் நடிக்க வந்துவிட்டார்.  இந்த படத்தில் மொத்த செலவு 25 நாள் கடையில் வருமானம் மட்டுமே என்று அண்ணாச்சி கூறினார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் இவர் பல கேலி கிண்டல்களுக்கு ஆளாகியுள்ளார்.

இவர்கள் தூத்துக்குடி மாவட்டம் பணிக்க நாடார் குடியிருப்பு என்ற ஊரிலிருந்து இவரது குடும்பம் சென்னைக்கு வந்து மளிகை கடை நடத்தி பின்னர் படிப்படியாக முன்னேறினார்கள். ஒரே கட்டிடத்தில் அனைத்தும் கிடைக்கும் விதத்தில் அமைத்த பெருமை சரவணா அண்ணாச்சிக்கு மட்டும் பொருந்தும்.

சரவணன் அண்ணாச்சி கடையை பார்த்து இந்தியா முழுவதும் இன்று மிகப்பெரிய அளவில் பல கிளைகளை நடத்திவரும் பிக் பஜார் என்ற நிறுவனத்திற்கு குருவே நம்ப சரவணா ஸ்டோர். இதை பிக் பஜார் நிறுவனர் அவரே கூறியுள்ளார். சென்னையில் டி நகரை உருவாக்கிய பெருமை சரவணா ஸ்டோர் சேரும்.

இன்றும் இவர்கள் வாழ்ந்த சொந்த ஊரான பணிக்க நாடார் குடியிருப்பு உள்ள மக்களுக்கு இன்றும் எண்ணற்ற உதவிகளை அனைத்து மக்களுக்கும் செய்து வருகிறார்கள். அந்த ஊரில் பசி என்ற வார்த்தையை இல்லாத அளவுக்கு அன்னதானம் வழங்கி வருகிறார்கள். இந்த ஊரை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்கள்.

இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம் இவர்களது சாதனையை, ஆனால் இவர் படத்தில் நடித்ததன் மூலம் இவரை பலரும் ஜோக்கர் போல் பார்க்கிறார்கள் என்பது வருத்தமளிக்கிறது. அவரது ஆசைக்கு நடித்துவிட்டார், அடுத்தடுத்து என்ன நடக்கிறது என்று பார்ப்போம் அதுவரை அவரை கேலி செய்யாமல் இருந்தால் படம் கூட இரண்டு நாள் ஓடும்.

Trending News