திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

அப்படி ஒரு மனநிலையில் அண்ணாச்சி.. அந்த மனசுக்கு எல்லாம் கூடி வரும் தலைவா

சரவணா ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தற்போது தி லெஜன்ட் என்ற படத்தில் நடித்துள்ளார். தொழிலில் பல சாதனைகள் படைத்த அண்ணாச்சி இப்படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் கால் பதிக்கிறார். மேலும் மனுஷன் எதை பற்றியும் கவலைப்படாமல் அசால்ட் பண்ணிக் கொண்டிருக்கிறார்.

அதாவது தி லெஜன்ட் படத்தின் ட்ரெய்லர், இசை வெளியீட்டு விழா என எல்லாமுமே இணையத்தில் ட்ரெண்டாகி சாதனை படைத்தது. அதே அளவுக்கு இவை அனைத்தும் ட்ரோல்களும் செய்யப்பட்டு வருகிறது. இதனால் அண்ணாச்சி தற்போது ஒரு மனநிலைக்கு வந்துள்ளார்.

தி லெஜண்ட் படம் மிக விரைவில் வெளியாக உள்ளது. படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தால் அண்ணாச்சி நிறைய படங்களில் நடிப்பாராம். அதுவே படம் தோல்வியடைந்து விட்டால் உடனே அடுத்த படத்தில் நடிப்பாராம்.

அதாவது விடாமுயற்சியால் எப்படியாவது சினிமாவில் நிரந்தர இடம் பிடிக்க வேண்டும் என்ற முனைப்பில் அண்ணாச்சி இருக்கிறார். பிஸ்னஸ் மேன் ஆக ஜெயிச்சாச்சு, அதேபோல் சினிமாவிலும் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என ஆசைப்படுகிறாராம்.

அண்ணாச்சி தன்னுடைய படத்தை தானே தயாரித்து வருகிறார். தி லெஜன்ட் படத்திற்கே கோடிக்கணக்கில் அண்ணாச்சி செலவு செய்துள்ளார். அதனால் அவர் சினிமா எடுப்பதால் நிறைய மக்களுக்கு வேலை கொடுக்கலாம் என்றும், அதன்மூலம் அவர்களின் அந்தஸ்து உயரும்.

இதனால் மக்களுக்காக சில விஷயங்களை செய்வதற்காகவும் அண்ணாச்சி சினிமாவில் முழு வீச்சாக இறங்க உள்ளாராம். இவ்வாறு மக்களுக்காக யோசிக்கும் அண்ணாச்சிக்கு எல்லாமே நல்லதாகவே நடக்கும் என பலரும் வாழ்த்தி வருகின்றனர்.

Trending News