ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

மைக்கேல் ஜாக்சன் கெட்டப்பில் மஞ்சள் காரில் வந்து இறங்கிய அண்ணாச்சி.. விஜயதசமி வைரல் போட்டோஸ்

Legend Saravanan: சினிமா பக்கம் கவனத்தை திருப்பியதிலிருந்தே லெஜன்ட் அண்ணாச்சியின் அலப்பறை ரசிகர்களுக்கு ஏதோ ஒரு விதத்தில் ஆர்வத்தை கூட்டி வருகிறது. ஏதாவது ஒரு பண்டிகை நாள் என்றால் சோசியல் மீடியாவில் இவருடைய போட்டோக்கள் தான் வைரலாகும்.

அப்படித்தான் சமீபத்தில் சுதந்திர தின விழாவை இவர் குழந்தைகளோடு கொண்டாடி இருந்தார். அதைத்தொடர்ந்து நேற்று விஜயதசமியை அவர் ஆட்டோ தொழிலாளர்களுடன் கொண்டாடி அந்த போட்டோ, வீடியோவை வெளியிட்டு ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பி இருக்கிறார்.

மஞ்சள் காரில் வந்து இறங்கிய அண்ணாச்சி

legend-saravanan1
legend-saravanan1

அதில் வழக்கம் போல அண்ணாச்சி மைக்கேல் ஜாக்சனுக்கே டஃப் கொடுக்கும் வகையில் பளீர் என்று காட்சி அளித்தார். அதிலும் ஆட்டோ டிரைவர்களுடன் கொண்டாடுவதால் அதை குறிப்பிடும் பொருட்டு மஞ்சள் காரில் வந்து இறங்கி அவர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தாராளமாகவே கொடுத்தார்.

அது மட்டுமின்றி அவரைப் பார்த்த சந்தோஷத்தில் ஆட்டோ ஓட்டுநர்கள் அனைவரும் மாலை மரியாதை என்று அமோகமான வரவேற்பை கொடுத்தனர். மேலும் எங்களுடன் ஒரு பயணம் வரவேண்டும் என்று கேட்டனர். அதற்கு அண்ணாச்சி நான்தான் ஓட்டுவேன் என்று கூறி அனைவரோடும் ஒரு ஜாலி ரைடு வந்த வீடியோ இப்போது மீடியாவையே கலக்கிக் கொண்டிருக்கிறது.

விஜயதசமி வைரல் போட்டோஸ்

legend-annachi
legend-annachi

இதைப் பார்த்த பலரும் அண்ணாச்சியை, அரசியலுக்கு எப்ப வர போறீங்க என கேள்வி எழுப்பி வருகின்றனர். அந்த அளவுக்கு அவருக்கான ரசிகர்கள் வட்டம் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக உயர்ந்து கொண்டிருக்கிறது. முன்னதாக அவருடைய மேக்கப் மற்றும் தோற்றம் குறித்து சில நெகட்டிவ் விமர்சனங்கள் வந்தது.

இருப்பினும் அடுத்த படம் எப்போது ஆரம்பிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பும் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறது. இப்படியாக விஜயதசமியை கலகலப்பாக கொண்டாடிய அண்ணாச்சி விரைவில் தன்னுடைய புதுப்பட அறிவிப்பை வெளியிடுவதற்கான வேலையிலும் இறங்கி இருக்கிறாராம். ஆக மொத்தம் அவர் புது புது விஷயங்களை செய்து சோசியல் மீடியாவை அதிர வைத்துக் கொண்டிருக்கிறார்.

ஆட்டோ தொழிலாளர்களுடன் லெஜன்ட் அண்ணாச்சி

saravanan-annachi
saravanan-annachi

Trending News