புதன்கிழமை, ஜனவரி 15, 2025

மாயா கூட கூட்டணி வைத்ததால் மொத்தமும் சர்வ நாசம்.. சரவண விக்ரம் சொன்ன பகீர் விஷயம்

BB7 Tamil: பிக் பாஸ் நிகழ்ச்சியை பொருத்தவரைக்கும் இதுவரை நடந்த ஏழு சீசன்களில், கலந்து கொண்ட போட்டியாளர்களில் பத்தில் ஒருவர் தான் நினைத்த அளவுக்கு வெற்றியை அடைந்திருக்கிறார்கள். மீதி முக்கால்வாசி பெயர் ஏற்கனவே சம்பாதித்த நல்ல பெயரை எடுத்துக் கொண்டு விட்டு தான் அந்த நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருக்கிறார்கள். இந்த முக்கால்வாசி லிஸ்டில் தான் சீரியல் நடிகர் சரவண விக்ரமும் சேர்ந்து விட்டார்.

எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பாண்டியன் ஸ்டோர் சீரியலில் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு சீரியலில் மட்டுமில்லாமல் தமிழ்நாட்டில் இருக்கும் ஒவ்வொரு வீட்டிலுமே இருக்கும் கடைக்குட்டி கண்ணனாகவே இவர் இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் முதல்முறையாக இவரை பார்த்த போது கூட, பாண்டியன் ஸ்டோர்ஸ் ரசிகர்களால் இவர் டைட்டில் வின்னர் ஆக கூட வாய்ப்பு இருக்கிறது என எல்லோருமே எதிர்பார்த்தார்கள்.

ஆரம்பத்தில் பிக் பாஸ் பார்வையாளர்கள் பலரும் சரவண விக்ரமுக்கு விளையாட தெரியவில்லை, சூது வாது தெரியாமல் இருக்கிறார் என்று பாவப்பட்டார்கள். ஆனால் மாயா கூட்டணியுடன் சேர்ந்து இவர் அடித்த லூட்டி எல்லோரையுமே முகம் சுளிக்க வைத்து விட்டது. ஒரு மனிதன் தன் வாழ்க்கையில் இந்த அளவுக்கு சுயமரியாதை இல்லாமல் இருப்பானா என்ற சந்தேகம் சரவண விக்ரமை பார்த்த பிறகு எல்லோருக்குமே வந்தது.

Also Read:கல் நெஞ்சும் காதலில் கரையும்.. பிக்பாஸ்க்கு பிறகு ரட்சிதா குறித்து தினேஷ் சொன்ன தகவல்

ஃபேமிலி ரவுண்டில் அவருடைய தங்கை வந்து அவரிடம் பேசியதும், சரவண விக்ரம் மாயாவிடம் இருந்து தன்னை ஒதுக்கி கொண்டார். இது மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தாலும் கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் போல், அந்த வாரமே விக்ரம் வீட்டை விட்டு வெளியேறியும் விட்டார். எலிமினேஷன் ஆன பின்பு கூட அவர் மாயாவிடம் இருந்து ஒதுங்கிய ஒரே காரணத்தால் அவர் மீது இருந்த நெகட்டிவ் விமர்சனங்கள் மொத்தமும் கொஞ்சம் கொஞ்சமாக மாறத் தொடங்கியது.

சரவண விக்ரம் சொன்ன பகீர் விஷயம்

ஆனால் பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி வாரத்தில் கெஸ்ட் ஆக உள்ளே வந்தபோது மீண்டும் அவர் மாயா உடன் சேர்ந்தது அவருக்கே மிகப்பெரிய நெகட்டிவாக மாறிவிட்டது. சரவண விக்ரமின் இந்த செயலை கண்டு அவர் தங்கையின் போட்டிருந்த பதிவுக்கு எல்லோரிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்து கிட்டத்தட்ட ஒரு வாரம் ஆகியும் இன்று வரை அந்த நிகழ்ச்சியின் தாக்கம் மக்களிடையே இருப்பதால், அவர்களுக்கு அதிருப்தி கொடுத்த போட்டியாளர்களை இன்று வரை கழுவி ஊற்றி வருகிறார்கள்.

இது போன்ற ஒரு சூழ்நிலையில் சரவண விக்ரம் நேற்று இரவு தன்னுடைய இன்ஸ்டா பதிவில் ஐ குட் மை ஃபேஷன் என்ற ஒரு தகவலை பதிவிட்டிருந்தார். தன்னுடைய தொழிலில் இருந்து அவர் விலகுவதாக பதிவிட்டிருந்தது எல்லோருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருந்த நேரத்தில், உடனே அதை டெலிட் செய்து விட்டார். மாயாவுடன் சேர்ந்ததால் மொத்தமும் சர்வ நாசமானதை மறைமுகமாக சரவண விக்ரம் தெரிவித்து இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.

Saravana Vickram
Saravana Vickram

Also Read:பிக்பாஸ் பைனல் மேடையில் நடந்த மிகப்பெரிய தகராறு.. அர்ச்சனா இன்னும் வெளியில் வராததற்கு இதுதான் காரணமா?

Trending News