ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 15, 2024

கமலுக்கு ஒரு குத்து, மாயாவுக்கு ஒரு குத்து.. யாரு சாமி இவரு.? பொளந்து கட்டும் டைட்டில் வின்னர் அப்பா

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியில் இந்த வாரம் ஃப்ரீஸ் டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதன்படி போட்டியாளர்களின் ரத்த சொந்தங்கள் அனைவரும் இன்று பிக்பாஸ் வீட்டுக்குள் வருகை புரிந்து நிகழ்ச்சியின் போக்கையே மாற்றி சுவாரஸ்யப்படுத்தி இருக்கின்றனர்.

அதில் டைட்டில் வின்னரான சரவண விக்ரமின் அப்பா ஒரு ஆர்மி தொடங்கும் அளவுக்கு ரசிகர்களை பிடித்து விட்டார். அதுவும் விஷப்பாட்டில் மாயாவையே அவர் கும்பிடு போட்டு ஓட வைத்தது வேற லெவலில் இருந்தது. அந்த வீடியோக்கள் தான் இப்போது வைரல் ஆகி வருகிறது.

அந்த வகையில் மாயாவை பார்த்து அவர், இதெல்லாம் கமல் சார் வேணும்னா நம்புவாரு. ஆனா நான் 24 மணி நேரமும் நிகழ்ச்சியை பார்க்கிறேன். என்கிட்ட எல்லாம் செல்லாது என ஒரே கல்லில் ரெண்டு மாங்காய் அடித்தார். ஆனா இதை விட ஸ்பெஷல் ஐட்டம் ஒன்னு இருக்கு என பிக் பாஸுக்கு அவர் வைத்த கோரிக்கை தான் யாரு சாமி இவரு என கேட்க வைத்திருக்கிறது.

Also read: சாத்தான் வேதம் ஓதுதா.? தில்லுமுல்லு செஞ்சி கப்பு வாங்கிட்டு ஓவர் ரவுசு விடும் பிக்பாஸ் வின்னர்

அதாவது போட்டியாளர்களிடம் கலகலப்பாக பேசிய விக்ரமின் அப்பா திடீரென கேமரா முன்பு நின்று கொண்டு என்னை ஒரு வாரத்திற்கு கெஸ்ட் ரோல் கொடுத்து இங்க தங்க வைங்க. என் பையன் மாதிரி எல்லாம் இருக்க மாட்டேன். வேற மாதிரி இருப்பேன் என சொன்னது தான் ஹைலைட்.

அதைத்தொடர்ந்து விக்ரமை ஒழுங்கா விளையாடுவியா என கேட்டுக்கொண்டு அடிக்க துரத்தியதிலிருந்து ஒவ்வொருவரை பற்றியும் மனம் கோணாதவாறு வைத்த சில விஷயங்களும் ரசிக்கும் வகையில் இருந்தது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் அர்ச்சனாவின் அப்பா தன் மகளை கேலி செய்தவர்களை எல்லாம் தேடி தேடி போய் இப்படி பண்ணாதீங்க என சொன்னார்.

ஆனால் விக்ரமின் அப்பாவோ அப்படியே நேர்மாறாக விளையாட்டுப் போக்கில் அனைத்தையும் கடந்து சென்று விட்டார். அதன்படி விக்ரமுக்கு பதில் அவங்க அப்பா வந்திருந்தா நிச்சயம் அவர்தான் டைட்டில் வின்னர் ஆகியிருப்பார். அந்த அளவுக்கு ஒரே நாளில் அவர் மொத்த ஆடியன்சையும் கவர்ந்து விட்டார்.

Also read: நிக்சனை நாசுக்காக அசிங்கப்படுத்தி விட்ட அர்ச்சனாவின் அப்பா.. ஆண்டவரும் டோட்டல் டேமேஜ்

- Advertisement -

Trending News