வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

இரண்டே வாரத்தில் உயிரை விட்ட சித்தப்பு.. கதறும் 4 மகள்கள், மகாநதி சீரியலில் நடந்த எதிர்பார்த்த ட்விஸ்ட்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியலான பாக்கியலட்சுமி, பாண்டியன் ஸ்டோர்ஸ், பாரதிகண்ணம்மா போன்ற சீரியல்கள் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், கடந்த ஜனவரி 23ம் தேதி முதல் இரவு 10 மணிக்கு துவங்கப்பட்ட புத்தம் புது சீரியலான மகாநதி சீரியலும் வெகு சீக்கிரமே ரசிகர்களின் மனதைக் கவர்ந்திருக்கிறது.

இந்த சீரியலில் சரவணன், சுஜாதா, லட்சுமி, பிரியா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். அதிலும் சரவணன் இந்த சீரியலில் 4 பெண் குழந்தைகளுக்கு தந்தையாக நடித்து கடந்த சில நாட்களாக நாடகத்தில் கலக்கிக் கொண்டிருந்தார். ஆனால் சீரியல் துவங்கப்பட்ட இரண்டே வாரத்தில் அவர் இறந்து போனதாக காண்பித்து சின்னத்திரை ரசிகர்களை கண்கலங்க வைத்துள்ளனர்.

Also Read: காந்தாரா படத்தை வைத்து ஓட்டியதால் விலகும் சீரியல் பிரபலம்.. விஜய் டிவி டிஆர்பி-க்கு வைத்த பெரிய ஆப்பு

இது ஏற்கனவே தெரிந்ததுதான். ஏனென்றால் இந்த சீரியல் துவங்குவதற்கு முன்பே வெளியான ப்ரோமோவில் 4 மகள்களும் தங்களது அப்பாவை இழந்தது போலவே காண்பித்தனர். அதன் பிறகு சீரியல் ஒளிபரப்பான ஒரு சில வாரங்களில் சரவணன் தன்னுடைய குழந்தைகளுடனும் மனைவியுடனும் சந்தோசமாக வாழ்வதை காட்டினார்கள். இது சின்னத்திரை ரசிகர்களையும் மகிழ்வித்தது.

ஆனால் தற்போது மகாநதி சீரியலில் வெளிநாடு சென்ற சரவணன் பணத்தை தன்னுடைய நண்பரின் பாதுகாப்பில் வைத்திருந்தார். ஆனால் அவர் ஏமாற்றி விட்டதால் மன உளைச்சலில் தூங்கிக் கொண்டிருக்கும் போதே சரவணன் இறந்து விடுகிறார். இதைத் தாங்கிக் கொள்ள முடியாத 4 மகள்களும் கதறி அழுகின்றனர்.

Also Read: 3 பேரை கழட்டி விட்டு புது காதலனுடன் கமிட்டான ஆயிஷா.. இதாவது கல்யாணத்தில் முடிஞ்சா சரிதான்

கடைசியில் சரவணனுக்கு ஈமசடங்குகளை அவருடைய மகள்கள் செய்வது பார்ப்போரை கலங்க வைக்கிறது. சரவணன் ஏற்கனவே கார்த்தி நடிப்பில் சூப்பர் ஹிட் ஆன பருத்திவீரன் படத்தில் சித்தப்புவாக நடித்து ரசிகர்களுக்கு பரீட்சியமான நிலையில், மகாநதி சீரியலில் சின்னத்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.

ஆனால் சீரியல் துவங்கப்பட்ட இரண்டே வாரத்தில் உயிரை விட்டுட்டியே சித்தப்பு! என்று நெட்டிசன்கள் சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்கின்றனர். இதன்பிறகு இந்த சீரியலில் 4 மகள்களும் தந்தை இல்லாமல் இந்த சமுதாயத்தில் எப்படி முன்னேறுகிறார்கள் என்பதை வைத்து சீரியலின் முழு கதையும் அமையும்.

Also Read: காதலர் தினத்திற்கு படுமோசமான புகைப்படம் வெளியிட்ட தர்ஷா.. அடுத்த சன்னி லியோன் நீங்க தான்

Trending News