வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

இளைய தளபதி சரவணன் ஹீரோவாக நடித்த 4 ஹிட் படங்கள்.. அடுத்த விஜயகாந்த் என எதிர்பார்த்த படங்கள்

பருத்தி வீரன் படத்தின் மூலம் கார்த்திக்கு சித்தப்பாவாக பிரபலமான சரவணன் ஹீரோவாக பல படங்கள் நடித்துள்ளார். இவரது திரை வாழ்க்கையில் ஒரு சில படங்கள் முக்கிய இடத்தையும் பிடித்துள்ளது, பல படங்கள் தோல்வி அடைந்துள்ளன. அந்த வரிசையில் இவர் நடிப்பில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்த திரைப்படங்களின் பட்டியலை தற்போது பார்க்கலாம்.

வைதேகி வந்தாச்சு: வைதேகி வந்தாச்சு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக சரவணன் அறிமுகமானார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக அர்ச்சனா நடித்துள்ளார், இந்த படத்தை ராதா மோகன் என்கிற இயக்குனர் இயக்கியுள்ளார். சரவணனின் திரைவாழ்க்கையில் முதலில் வெற்றிகண்ட படங்களில் வைதேகி வந்தாச்சு முக்கிய இடம் உண்டு.

அபிராமி: இப்படத்தில் சரவணனுக்கு ஜோடியாக கஸ்தூரி மற்றும் வினோதினி நடித்துள்ளனர். இப்படத்தில் சுஜாதா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றார். இப்படத்தின் வெற்றிக்கு கவுண்டமணியின் காமெடி ஒரு பக்க பலமாக இருந்தார். திலீப் குமார் இயக்கிய படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பு பெற்றது.

சந்தோசம்: கார்த்திக் இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளியான சந்தோசம் திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது, இப்படத்தில் ஜோடியாக சுவலட்சுமி நடித்திருந்தார். கேஎஸ் ரவிக்குமார் மற்றும் பிரகாஷ்ராஜ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து இருப்பார்கள். சரவணன் வாழ்க்கையில் சந்தோசம் திரைப்படம் வசூல் ரீதியாக பெரும் வரவேற்பைப் பெற்றது.

பொண்டாட்டி ராஜ்ஜியம்: கேஎஸ் ரவிக்குமார் இயக்கத்தில் சரவணன் நடிப்பில் வெளியான பொண்டாட்டி ராஜ்யம் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சரவணன் திரை வாழ்க்கையில் மிக முக்கிய படமாக அமைந்தது. இப்படம் பாக்ஸ் ஆபீஸ் கலக்கியது குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு இவர் நடிப்பில் சூரியன் சந்திரன், நல்லதே நடக்கும், பார்வதி என்னை பாரடி, திரும்பிப்பார் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். ஆனால் எந்த ஒரு திரைப்படமும் பாக்ஸ் ஆபிஸில் வசூல் ரீதியாக இவருக்கு வெற்றி பெறவில்லையாம்.

Trending News