வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

வருங்கால மனைவியிடம் நைட் பார்ட்டியில் முத்தம் பெற்ற சரவணன்..

சமீப காலமாகவே சீரியல்களில் நடித்து வரும் ரீல் இளம் ஜோடியினர், ரியல் ஜோடியினராக மாறிவருவது டிரெண்டு ஆகிவிட்டது. அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ராஜா ராணி 1 சீரியலில் நடித்த ஜோடிகள் சஞ்சீவ்-ஆலியா மானசா நிஜ வாழ்க்கையில் ஒன்று சேர்ந்துள்ளனர். அதேபோல் தற்போது ராஜா ராணி 2 சீரியலின் நாயகனாக நடித்து வரும் சித்து, இந்த சீரியலுக்கு முன்பு அவருடன் நடித்த பிரபல நடிகை ஷ்ரேயா அஞ்சனைத் திருமணம் செய்ய உள்ளார்.

கலர்ஸ் தமிழில் டிஆர்பியில் நம்பர் ஒன் இடத்தைப் பிடித்து, மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடன் ஓடிய நாடகம் தான் திருமணம். இந்த நாடகத்தில் சித்து கதாநாயகனாகவும், ஷ்ரேயா அஞ்சன் கதாநாயகியாகவும் நடித்து இருந்தனர். இந்த நாடகத்தில் இவர்களுக்கு இடையில் நடக்கக் கூடிய அனைத்து ரொமான்ஸ் சீன்களும் வலைதளங்களில் வைரலாகி வந்தது. இந்த ரீல் தம்பதிகள் ரியல் தம்பதியாக மாற்றினால் நன்றாக இருக்கும் என்று ரசிகர்களாலும் மற்றும் இவர்களை காண்கிற பார்வையாளர்களும் கருத்து தெரிவிக்கப்பட்டது.

அதற்கு பிறகு இவர்கள் இருவரும் ஒருவர் மீது ஒருவர் காதல் வயப்பட்டனர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இவர்கள் இந்த ஆண்டு இறுதிக்குள் திருமணம் செய்யப் போவதாக தெரிவித்துள்ளனர்.

இச்சூழலில் நேற்றைய தினம் நடிகர் சித்துவுக்கு பிறந்தநாள். அனைத்து பிரபலங்களும், உறவினர்களும், நண்பர்களும் இவருக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர். அதைத் தொடர்ந்து நடிகர் சித்து தனது காதலியுடனும் இவரின் நெருங்கிய நண்பருமான ஸ்டார் விஜய் தொலைக்காட்சியின் முக்கிய பிரபலங்களுடனும் தனது பிறந்தநாளை வெகு சிறப்பாகவும், மிக உற்சாகத்துடனும் கொண்டாடி உள்ளார்.

நடிகர் சித்துக்காக வாங்கப்பட்ட பர்த்டே கேக்கிலிருந்து நான்கு புறங்களிலும் பட்டாசுகள் ஜொலிக்க, நண்பர்களின் ஆரவாரத்துடன் கேக்கை வெட்டினார். பிறகு என்ன அனைத்து படங்களிலும் வருவதுபோல் காதலியுடன் காதலையும், கேக்கையும் மாறிமாறி பரிமாறிக் கொண்டனர்.

தற்போது இந்த பர்த்டே செலிப்ரேஷனை வீடியோவாக எடுத்து வலைதளங்களில் வெளியிட்டு உள்ளனர். இது வைரலாகி கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Trending News