செவ்வாய்க்கிழமை, ஜனவரி 21, 2025

பிக்பாஸ்க்கு பலமுறை கூப்பிட்ட விஜய் டிவி.. இருக்குற கொஞ்ச நஞ்ச பேர கெடுக்கவா என நழுவிய நடிகை

விஜய் டிவியில் ஒளிபரப்பான சீரியல்களிலேயே மிகவும் பிரபலமான சீரியல் என்றால் அது சரவணன் மீனாட்சி சீரியல் தான். இந்த சீரியலுக்கு இன்றுவரை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருகின்றனர். அதனால் வேறு வழியின்றி விஜய் டிவியும் இதே சீரியல் பெயரை வைத்து மற்ற நடிகர்களை நடிக்க வைத்து வருகிறது.

சரவணன் மீனாட்சி சீரியல் மூலம் ரசிகர்களிடம் மிகவும் பிரபலமானவர் ரட்சிதா. அதன்பிறகுதான் இவருக்கு ஏராளமான சீரியல்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. தற்போது வரை விஜய் டிவியில் தொடர்ந்து கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி ரியாலிட்டி ஷோக்கள் மற்றும் சீரியல்களில் தனது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

ரட்சிதாவிடம் சமீபத்திய பேட்டியில் பல்வேறு விதமான கேள்விகள் கேட்கப்பட்டது. அதற்கு சற்றும் சளைக்காமல் ஒவ்வொரு கேள்விக்கும் சாமர்த்தியமான பதில்களை அளித்து வந்தார். அதில் முதல் கேள்வியாக உங்களுக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்கான ஆர்வம் இருக்கிறதா, இல்லை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கூப்பிட்டார்களா என கேட்கப்பட்டது.

அதற்கு ரட்சிதா இந்த சீசன் மட்டுமல்ல பிக்பாஸில் முதல் சீசனில் இருந்து தற்போது வரை என்னை கலந்து கொள்ள அழைத்தார்கள். ஆனால் நான் சீரியலில் நடித்து வருவதால் என்னால் கலந்து கொள்ள முடியவில்லை. மேலும் பிக்பாஸில் நெகட்டிவான விமர்சனங்களும் வரும், பாசிட்டிவான விமர்சனங்களும் வரும் அதனால் அதைப் பற்றியெல்லாம் எனக்கு பயமில்லை கலந்து கொள்வதற்கான நேரம் கிடைக்கவில்லை என கூறியுள்ளார்.

மேலும் சீரியலில் கதாநாயகியாக நடித்து விட்டீர்கள் வில்லியாக நடிப்பதற்கு ஆசை இருக்கிறதா என கேட்கப்பட்டது. அதற்கு ரட்சிதா கண்டிப்பாக நான் வில்லியாக நடிப்பேன். ஆனால் அதற்கு சில இயக்குனர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும் எனவும் சரியான வாய்ப்பு கிடைத்தால் அந்த கதாபாத்திரத்தை ஏற்று நடித்து தனது ஆசையை நிறைவேற்றிக் கொள்வேன் எனவும் கூறியுள்ளார்.

Trending News