செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

நீ அடங்க மாட்டியா காந்தாரா சரவணா.. மிச்சர், பூந்தி வித்தவனுக்கு ஏண்டா இவ்வளவு பில்டப்

விஜய் டிவியின் பிரைம் டைம் சீரியல் ஆன ராஜா ராணி 2 சீரியலில் நடப்பதெல்லாம் லாஜிக்கே இல்லை என்று ரசிகர்கள் சோசியல் மீடியாவில் இந்த சீரியலை குறித்து கிழித்து தொங்க விடுகின்றனர். அதிலும் இப்போது சரவணன் காட்டிக்கொண்டிருக்கும் அலப்பறைக்கு அளவில்லாமல் போகிறது.

இதற்கு முன்பு ஏற்கனவே சரவணன், தீவிரவாதிகளிடமிருந்து சந்தியா மற்றும் போலீஸ் உயர் அதிகாரியை காந்தாரா கெட்டப்பில் காப்பாற்றியதன் மூலம் பல கேலி கிண்டலுக்கு ஆளானார். அதுவும் பத்தாது இப்போது மீண்டும் சந்தியாவிற்கு பதில் ரவுடிகளுடன் சண்டை போட்டு சீரியலின் ஹீரோ என்பதை நிரூபித்திருக்கிறார்.

Also Read: 3 பேரை கழட்டி விட்டு புது காதலனுடன் கமிட்டான ஆயிஷா.. இதாவது கல்யாணத்தில் முடிஞ்சா சரிதான்

ஐபிஎஸ் அதிகாரியாக இருக்கும் சந்தியா,  ஆம்புலன்ஸின் மூலம் கடத்த நினைத்த கருப்பு பணத்தை சுற்றி வளைத்து பிடித்திருக்கிறார். இந்த பணம் பெரிய ரவுடி கும்பல் உடையது என்பதால் அந்த ரவுடிகள் அனைவரும் சந்தியாவை அடித்து துவைத்து அந்த பணத்தை வாங்கி விடலாம் என்று ரவுண்டு கட்டி உள்ளனர்.

அந்த சமயம் சந்தியாவிற்கு பதில் சரவணன் உள்ளே புகுந்து ரவுடிகளை அடித்துப் பறக்கவிட்டுள்ளார். அதன்பிறகு அந்த இடத்திற்கு வந்த போலீஸ், ரவுடிகளை கைது செய்து சிறையில் அடைத்தது. இப்படி ஒவ்வொரு முறையும் ஐபிஎஸ் சந்தியாவை காட்டிலும் சரவணன்தான் மனைவிக்கு பதில் போலீஸ் வேலையை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

Also Read: காதலர் தினத்திற்கு படுமோசமான புகைப்படம் வெளியிட்ட தர்ஷா.. அடுத்த சன்னி லியோன் நீங்க தான்

மேலும் ராஜா ராணி 2 சீரியல் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘என் கணவன் என் தோழன்’ என்ற ஹிந்தி சீரியலின் டப்பிங் என்பதால் இந்த சீரியலின் முழு கதையும் சின்னத்திரை ரசிகர்களுக்கு அத்துபடி. இருப்பினும் என் கணவன் என் தோழன் சீரியலை தமிழ் நடிகர்களை வைத்து பார்த்தால் எப்படி இருக்கும் என்ற ஆசையில் ஒவ்வொரு நாளும் ராஜா ராணி 2 சீரியலை பார்க்கின்றனர்.

இருப்பினும் அவர்களுக்கு ஏமாற்றம் கிடைக்கும் வகையிலேயே இந்த சீரியலின் இயக்குனர் படு மொக்கையாக எடுப்பது பார்ப்போரை காண்டேற்றுகிறது. அதுமட்டுமின்றி நெட்டிசன்களும் சரவணனின் சண்டை காட்சியை பார்த்தபின் ‘நீ அடங்க மாட்டியா காந்தாரா சரவணா, மிச்சர், பூந்தி வித்தவனுக்கு ஏண்டா இவ்வளவு பில்டப்’ என்று மீண்டும் சரவணனை பங்கம் செய்துள்ளனர்.

Also Read: தொடர்ந்து கர்ப்பமாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் மருமகள்கள்.. மீனா கெதி அதோ கெதி

Trending News