திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

கேலிக்கூத்துக்கு உள்ளான தி லெஜன்ட் படம்.. மைதானமே இல்லாமல் சிக்சர் அடிக்கும் அண்ணாச்சி

சரவணன் ஸ்டோர்ஸ் அண்ணாச்சி தி லெஜன்ட் படத்தின் மூலம் கதாநாயகனாக சினிமாவில் அடியெடுத்து வைத்துள்ளார். இப்படத்தின் பாடல், ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. மேலும், இவை வெளியாகி சில மணி நேரத்திலேயே பல மில்லியன் பார்வையாளர்களை தாண்டி சென்றது.

சமீபத்தில் தி லெஜன்ட் படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் மிக பிரமாண்டமாக நடைபெற்றது. இதற்காக பல கோடிகள் செலவு செய்து இருந்தார் அண்ணாச்சி. இதில் பல நடிகைகள் பங்குபெற்று விழாவை சிறப்பித்து வைத்தனர். இந்நிலையில் அண்ணாச்சி படங்களில் நடிக்கிறார் என்று தெரிந்ததுமே இணையத்தில் மீம்ஸ்கள் வர ஆரம்பித்தது.

அதிலும் ட்ரெய்லர், பாடல் என அனைத்தும் வெளியாகி ட்ரோல், மீம்ஸ்கள் என சோசியல் மீடியாவை அல்லோலபட்டது. ஆனால் அதற்கெல்லாம் கவலைப்படாமல் அண்ணாச்சி அசால்ட் பண்ணி வருகிறாராம். அவ்வாறு கிரியேட்டர் சொல்லும் சில கருத்துக்களையும் ஏற்ற அதுபடி செய்து வருகிறாராம்.

அதாவது ஒருவர் அண்ணாச்சியின் குரல் சரியில்லை, நீங்கள் வேறு ஒருவரை வைத்து படத்தில் டப்பிங் பேசலாம் என்று கூறியுள்ளார். அதை அறிந்த அண்ணாச்சி வேறு ஒருவர் வேண்டாம் நானே அதை சரிசெய்து திரும்பவும் பேசி காட்டுகிறேன் என கூறியுள்ளாராம்.

அதற்காக நேரம் எடுத்து கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு முறை பயிற்சி எடுத்து பேசிவிட்டாராம். இந்நிலையில் அண்ணாச்சி புதிதாக பேசியதை படத்தில் சேர்க்கும் வேலையில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். என்னதான் கோடி கோடியாக அண்ணாச்சியிடம் பணம் இருந்தாலும் அதற்கான சிரம் எடுத்து இவ்வாறு பேசியுள்ளார்.

இதனால் பலரும் அண்ணாச்சியை பாராட்டி வருகின்றனர். மேலும் தன்னை ட்ரோல் செய்பவர்களையும் தன்னுடைய முயற்சியால் மைதானமே இல்லாமல் சிக்சர் அடித்து வருகிறார் நம்ம அண்ணாச்சி. மிக விரைவில் தி லெஜண்ட் படம் வெளியாகவுள்ளது.

Trending News