விஜய் டிவியின் ராஜா ராணி2 சீரியலில் சரவணனின் கடையில் அப்பாவி போல் வேலை பார்த்த தீவிரவாதி செல்வம் கோயில் திருவிழாவில் வெடிகுண்டு வைத்து தென்காசி ஊர் மக்களை கொன்று குவிக்க திட்டமிட்டான். ஆனால் அவனுடைய திட்டத்தை சந்தியா கண்டுபிடித்து தீவிரவாதிகளை பிடித்து போலீஸ் கையில் ஒப்படைத்தார்.
இதனால் போலீஸ் கமிஷனர் சந்தியாவை வந்து நேரில் பாராட்டியது மட்டுமல்லாமல் தன் தலையிலிருந்த போலீஸ் கேப்பை எடுத்து சந்தியா தலையில் வைத்து, ‘உன்னைப் போன்ற தைரியமான பெண்கள் போலீசில் இருக்க வேண்டும்’ என பாராட்டினார். தன்னுடைய அம்மா அப்பாவின் கனவு அதுதான் என சந்தியா நினைத்துக் கலங்குகிறார்.
இந்த சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திய சரவணன், சந்தியாவிற்கு போலீஸ் ஆகுவதற்கான அத்தனை திறமையும் இருக்கிறது என்பதை கண்கூடாக பார்த்த அம்மாவிடம், சந்தியா போலீஸ் ஆகுவதற்கு சம்மதம் வாங்குவதற்காக ஊர் முழுக்க சந்தியாவின் கட்டவுட் வைத்து மக்கள் பாராட்டும் வகையில் செய்தார்.
ஊர் மக்களே தன்னுடைய மருமகளை பாராட்டும்போது பெருமை கொண்ட சிவகாமி, இந்த விஷயத்தில் சந்தியாவை மனதாரப் பாராட்டுகிறார். இதன்பிறகு சரவணன் தான் பிளான் போட்டு இதையெல்லாம் செய்திருக்கிறார் என்பதை தெரிந்துகொண்ட அர்ச்சனா, அதை சிவகாமியிடம் போட்டுக் கொடுக்கிறாள்,
ஏற்கனவே சரவணனின் மீது கோபத்தில் இருக்கும் சிவகாமியும், பொண்டாட்டிக்காக என்னவெல்லாம் செய்கிறான் என மேலும் சரவணனின் மீது கோபத்தின் உச்சத்துக்கே செல்கிறாள். மறுநாள் காலையில் பேப்பரில் சந்தியாவை பாராட்டி தலைப்பு செய்தியாக வந்ததைப் பார்த்த சந்தியாவின் மாமனார் இடம் சரவணன் மட்டுமல்ல ஊரை சந்தியாவை நினைத்து பெருமைப் படுகிறது என சமாதானப்படுத்துகிறார்.
இதன்பிறகு இனி வரும் நாட்களில் சிவகாமி குழந்தை பெற்றுக் கொடுத்தால் நிச்சயம் நீ போலீஸ் ஆகலாம் என்ற கட்டுப்பாடுடன் சந்தியாவை ஐபிஎஸ் ஆவதற்கு சம்மதம் தெரிவிப்பார். இதை ஏற்றுக்கொண்டு சந்தியாவும் குடும்பத்திற்காக குழந்தையை பெற்றுக் கொடுத்து அதன் பிறகு போலீஸ் ட்ரைனிங் செல்வாள்.