செவ்வாய்க்கிழமை, டிசம்பர் 24, 2024

திரையரங்கை துவம்சம் செய்த சர்தார்.. ஒரு மாதத்துக்குள்ளே ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு

கார்த்தி நடிப்பில் சமீபகாலமாக வெளியாகும் எல்லா படங்களுமே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. விருமன், பொன்னியின் செல்வன் படங்களின் வெற்றியை தொடர்ந்த கார்த்தி நடிப்பில் வெளியாகி இருக்கும் சர்தார் படமும் ரசிகர்களிடம் மாபெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த படத்தின் வெற்றியின் மூலம் கார்த்தி ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார். பி எஸ் மித்ரன் இயக்கத்தில் ரஜிஷா விஜயன், ராசி கண்ணா மற்றும் பல நடிப்பில் சர்தார் படம் வெளியாகி இருந்தது. இப்படத்தை பிரின்ஸ் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது.

Also Read : தொடர் வெற்றியால் இயக்குனரை டீலில் விட்ட கார்த்தி.. ஒரு வருடமாக காத்திருந்த பரிதாபம்

மேலும் உதயநிதி ஸ்டாலின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தமிழ்நாட்டு உரிமையை பெற்றது. இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் படத்திற்கு போட்டியாக வெளியானது. இந்நிலையில் பிரின்ஸ் படம் கலவையான விமர்சனங்களை தான் பெற்றது.

ஆகையால் இந்தப் படத்திற்கு ஒதுக்கப்பட்ட திரையரங்குகளிலும் சர்தார் படம் திரையிடப்பட்டது. இப்படம் குறைந்தது 12 நாட்களிலேயே 85 கோடி வசூல் செய்திருந்தது. தற்போது 100 கோடி கிளப்பில் சர்தார் படம் இணைந்துள்ளது. இதனால் சர்தார் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக இயக்குனர் மித்ரனுக்கு 50 லட்சம் மதிப்புள்ள காரை தயாரிப்பாளர் பரிசாக வழங்கினார்.

Also Read : அடுத்த 100 கோடி வசூலுக்கு தயாரான கார்த்தி.. எம்ஜிஆராக எடுக்கும் புது அவதாரம்

இந்நிலையில் தற்போது வரை திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சர்தார் படம் விரைவில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது. அதாவது இந்த படத்தை ஆஹா ஓடிடி தளம் கைப்பற்றி உள்ளது. வருகின்ற நவம்பர் 18 ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் இப்படம் வெளியாக உள்ளது.

ஆகையால் ரசிகர்கள் இனி வீட்டிலிருந்தே சர்தார் படத்தை பார்க்கலாம். இதுவரையுமே திரையரங்குகளிலேயே சர்தார் படம் நல்ல லாபத்தை பெற்ற நிலையில் ஓடிடி தளத்திற்கும் நல்ல விலைக்கு கொடுக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து வரும் கார்த்தி தனது அடுத்த பட வேலைகளில் பிஸியாக உள்ளார்.

Also Read : யாருமே எதிர்பார்க்காததை நடத்தி காட்டும் சர்தார்.. கார்த்திக்கு கொட்டும் பணமழை

Trending News