வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

யாருமே எதிர்பார்க்காததை நடத்தி காட்டும் சர்தார்.. கார்த்திக்கு கொட்டும் பணமழை

சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் மற்றும் கார்த்தியின் சர்தார் படம் ஒரே நாளில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியானது. இதில் பிரின்ஸ் படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி இருந்தது. மேலும் சத்யராஜ் சிவகார்த்திகேயனுடன் பல வருடங்கள் கழித்து இணைந்திருப்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது.

அதேபோல் சர்தார் படத்தில் கார்த்தி பல கெட்டப்புகளில் நடித்திருந்தார். இந்தப் படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றிருந்தது. மேலும் ஆரம்பத்தில் பிரின்ஸ் படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து இருந்த நிலையில் அதிக திரையரங்குகளில் வெளியானது. ஆனால் இப்படத்திற்கு மோசமான விமர்சனங்களை கிடைத்து.

Also Read :கார்த்தியின் கேரியரை சறுக்கலில் தள்ளிய 5 படங்கள்.. சர்தார் வரை துரத்திய பிரச்சனை

சர்தார் படம் வசூலில் அதகளம் செய்து வருகிறது. பி எஸ் மித்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் வெளியிட்டது. இப்படத்தில் கார்த்தி அப்பா, மகன் என இரட்டை வேடத்தில் நடித்திருந்தார். ரஜிஷா விஜயன், ராசி கண்ணா, ரிது ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படம் நல்ல லாபத்தை தொடர்ந்து கொடுத்து வருகிறது. மேலும் கார்த்தியின் படங்களில் சிறந்த ஓபனிங் பெற்ற படமாக சர்தார் படம் அமைந்துள்ளது. இந்நிலையில் முதல் வாரத்தில் தமிழ்நாட்டில் மட்டும் 380 திரையரங்குகளில் சர்தார் படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது.

Also Read :கார்த்தி அடுத்தடுத்த எடுக்கப்போகும் மூன்று அவதாரங்களின் 2ம் பாகம்.. எதிர்பார்ப்பை கிளப்பிய சர்தார்-2

இப்போது பிரின்ஸ் படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருவதால் இந்த படத்தின் திரையரங்குகள் தற்போது கார்த்தியின் சர்தார் படத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அதாவது இரண்டாவது வாரத்தில் யாரும் எதிர்பார்க்காத அளவு 500க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் சர்தார் படம் திரையிட உள்ளது.

மேலும் குறைந்த திரையரங்குகளில் சர்தார் படம் வெளியான போதே நல்ல வசூல் செய்த வந்த நிலையில் தற்போது அதிகப்படியான திரையரங்குகளில் திரையிட உள்ளதால் வசூல் இரட்டிப்பாக வாய்ப்பு உள்ளது. இப்போது வரை சர்தார் படம் 60 கோடி வசூல் செய்த நிலையில் மிக விரைவில் 100 கோடி கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கலாம். இதனால் கார்த்தி காட்டில் பணமழை கொட்ட போகிறது.

Also Read :சிவகார்த்திகேயனை முந்திய கார்த்தி.. பிரின்ஸ், சர்தார் 4 நாள் வசூல் இதுதான்

Trending News