திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

வாட்டர் கேனை பார்த்தாலே பதருமாம்.. கார்த்தியின் சர்தார் எப்படி இருக்கு.? முழு விமர்சனம்

இரும்புத்திரை, ஹீரோ வரிசையில் பிஎஸ் மித்ரன் இயக்கியிருக்கும் சர்தார் கார்த்தியின் நடிப்பில் தீபாவளி பட்டாசாக வெளியாகி இருக்கிறது. சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலர் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் பி எஸ் மித்ரன் முந்தைய படங்களில் சொல்லிய சமூக கருத்தை போல் இந்த படத்திலும் தண்ணீர் பிரச்சனையை பற்றி பேசி இருக்கிறார். கதைப்படி சோசியல் மீடியாவில் பிரபலமாக துடிக்கும் போலீசாக கார்த்தி வருகிறார். அவருடைய அப்பா ஒரு தேச துரோகி என்று அறிவிக்கப்பட்டதால் அவருடைய குடும்பமே தற்கொலை செய்து கொள்கிறது.

Also read : எதிர்பார்ப்பை எகிற வைத்த கார்த்தியின் சர்தார்.. வெளிவந்த ட்விட்டர் விமர்சனம்

அதில் கார்த்தி மட்டும் மற்றொரு போலீசால் வளர்க்கப்படுகிறார். தேச துரோகியின் மகன் என்ற அடையாளத்தை மறைப்பதற்காகவே கார்த்தி மீடியாவில் பிரபலமாக நினைக்கிறார். அப்போது தேசத்துரோகியாக கூறப்படும் லைலாவை பிடிக்கும் பொறுப்பு கார்த்திக்கு வழங்கப்படுகிறது. அந்தப் போராட்டத்தில் லைலா இறந்து போகிறார்.

ஆனால் உண்மையில் லைலா யார், அவருடைய மகனுக்கு என்ன பிரச்சனை, அதை கார்த்தி எப்படி தீர்த்து வைக்கிறார் என்பது போன்ற பல திருப்பங்களுடன் இப்படம் வெளிவந்துள்ளது. அப்பா மகன் என்ற இரு வேடங்களில் நடித்திருக்கும் கார்த்தி படத்தின் தூணாக இருக்கிறார். குடிநீர் மாபியா என்ற விஷயத்தை பல ஆராய்ச்சிகள் செய்து திரைக்கதையாக கொண்டு வந்திருக்கும் இயக்குனருக்கு நிச்சயம் ஒரு பாராட்டுகளை தெரிவிக்கலாம்.

Also read : ஷங்கரை மிஞ்சிய பிரம்மாண்டம்.. மொத்த கெட்டப்புகளையும் மறைத்து வெளியிட்ட சர்தார் படக்குழு

படத்தின் முதல் பாதியில் விறுவிறுப்பு குறைந்தாலும், இரண்டாம் பாதியின் வேகமும், சுவாரசியமும் அதை ஈடு செய்கிறது. படு வேகமாக சென்று கொண்டிருக்கும் படத்தில் இடையிடையே காதல் மற்றும் பாடல் காட்சிகள் சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.

இருப்பினும் சர்தாராக வரும் அப்பா கார்த்தி பல இடங்களில் மிரட்டி இருக்கிறார். அதேபோன்று மகன் கார்த்தியும் உளவு வேலை செய்வதற்காக கிட்டத்தட்ட 15 கெட்டப்புகளை போட்டு அசத்தியிருக்கிறார். நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடித்திருக்கும் லைலாவின் நடிப்பும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இப்படி படத்திற்கு நிறைய விஷயங்கள் பலமாக அமைந்திருந்தாலும் சில குறைகளும் இருக்கின்றது. அந்த வகையில் ஜிவி பிரகாஷ் பின்னணி இசைக்கு கொடுத்திருந்த முக்கியத்துவத்தை பாடல் காட்சிகளில் கொடுக்கவில்லை. மேலும் லைலாவின் கேரக்டர் வேலைக்காரன் படத்தில் வரும் சினேகாவின் கதாபாத்திரத்தை நினைவூட்டுகிறது. இப்படி சில சில சறுக்கல்கள் இருந்தாலும் இந்த சர்தார் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

சினிமா பேட்டை ரேட்டிங்: 3/5

Also read : அதிக ஹைப் கொடுத்து பிளாப்பான கெட்டப் சேஞ் படங்கள்… தோல்வி பயத்தில் கார்த்தி

Trending News