திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்த பிஎஸ் மித்ரன்.. கமலைப் போல் 50 லட்சத்துக்கு பரிசை வாரி இறைத்த கார்த்திக்

விருமன், பொன்னியின் செல்வன் படத்தின் வெற்றியை தொடர்ந்து பி எஸ் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் சமீபத்தில் வெளியாகி திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் படம் சர்தார். இப்படத்தின் மூலம் கார்த்தி தொடர்ந்த ஹட்ரிக் வெற்றி பெற்றுள்ளார்.

இதனால் தற்போது கார்த்தியின் மார்க்கெட் உச்சத்தை அடைந்துள்ளது. ஆகையால் தற்போது டாப் நடிகர்களுக்கு இணையாக கார்த்தியின் சம்பளம் அதிகப்படியாக உயர்ந்துள்ளது. இந்த சூழலில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான விக்ரம் படம் இண்டஸ்ட்ரியல் ஹிட் அடித்தது.

Also Read :யாருமே எதிர்பார்க்காததை நடத்தி காட்டும் சர்தார்.. கார்த்திக்கு கொட்டும் பணமழை

இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக கமல் படகுழுவுக்கு கார், பைக்கு என பரிசுகளை வாரி வழங்கினார். இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு ஒரு கோடி மதிப்பிலான காரை கமல் பரிசாக கொடுத்திருந்தார். தற்போது ஆண்டவரின் பாணியையே பலரும் பின்பற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் சிம்பு நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியை தொடர்ந்து தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் இயக்குனர் கௌதம் மேனனுக்கு பைக்கை பரிசாக வழங்கினார். மேலும் சிம்புக்கு கார் பரிசாக கொடுத்திருந்தார்.

Also Read :கார்த்தியின் கேரியரை சறுக்கலில் தள்ளிய 5 படங்கள்.. சர்தார் வரை துரத்திய பிரச்சனை

அதேபோல் சர்தார் படத்தின் வெற்றிக்காக தயாரிப்பாளர் லட்சுமணன் குமார் 50 லட்சம் மதிப்புள்ள டொயோட்டா பர்னிச்சூனர் கார் ஒன்றை இயக்குனருக்கு பரிசாக கொடுத்துள்ளார். இந்த காரின் சாவியை கார்த்தி இயக்குனர் பி எஸ் மித்ரனுக்கு வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

Toyota Fortuner SUV CAR Gifted to PS Mithran by Karthi

ps-mithran-karthik-sardar-movie
ps-mithran-karthik-sardar-movie

இந்த ஆண்டு தொடக்கத்திலிருந்து கார்த்தியின் படங்கள் அடுத்தடுத்து மாபெரும் வெற்றியை அடைந்து வருகிறது. சர்தார் படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த பேர் ஆதரவால் தற்போது இப்படத்தின் தியேட்டர் எண்ணிக்கையை அதிகரித்துள்ளனர். இதனால் சர்தார் படம் வசூலை வாரி குவித்து வருகிறது.

Also Read :கார்த்தி நடிக்கப் போகும் நான்கு பார்ட் 2 படங்கள்.. எதிர்பார்ப்பை கிளப்பிய மெகா கூட்டணி

Trending News