திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

ஓவியா மாதிரி விளையாடுறேன்னு ஆயா மாதிரி விளையாடும் சரோஜா.. இந்த வாரம் கிரேட் எஸ்கேப் ஆகிய போட்டியாளர்

Bigg Boss: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பிக் பாஸ் 8 சீசன் தொடங்கி கிட்டத்தட்ட 75 நாட்களை தாண்டி விட்டது. அந்த வகையில் தற்போது உள்ளிருக்கும் போட்டியாளர்கள் யார் என்றால் ஜாக்லின், முத்துக்குமரன், தீபக், மஞ்சரி, அருண், விஷால், சௌந்தர்யா, ஜெஃப்ரி, பவித்ரா, அன்சிதா, ராணவ், ரயான் என மொத்தம் 12 போட்டியாளர்கள் இருக்கிறார்கள்.

இதில் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்து இப்பொழுது வரை எந்த ஒரு விளையாட்டிலும் முழுமையாக பங்கு பெறாமல், தனக்கு என்ன தோணுதோ அதை தான் நான் செய்வேன் என்று கொஞ்சம் அடாவடித்தனமாக இருப்பது சௌந்தர்யா தான். மனசுல என்னமோ ஓவியா மாதிரி விளையாடுறேன்னு நெனப்புல பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்து கொண்டு க்யூடாக பண்றேன்னு பேர்ல ஏதோ இஷ்டத்துக்கு பண்ணி வருகிறார்.

ஆனால் ஓட்டு மட்டும் அதிகமாக கிடைத்து வருகிறது. இதற்குப் பின்னணியில் இருப்பது PR டீம் என்று சொல்லி இருந்தாலும் இதுவே சௌந்தர்யாவை இரண்டாவது இடத்திற்கு கூட்டிட்டு வந்து விடுமோ என்ற சந்தேகமும் தற்போது அதிகரித்து வருகிறது. அதற்கு ஏற்ற மாதிரி இந்த வாரம் சௌந்தர்யா நாமினேஷனுக்கு வராமல் எஸ்கேப் ஆகிவிட்டார்.

இதை கேள்விப்பட்டதும் சௌந்தர்யா சந்தோஷத்தில் துள்ளி குதிக்க ஆரம்பித்து விட்டார். இதை பார்த்து கடுப்பான முத்துக்குமரன் ஓவராக ஆடாமல் கொஞ்சம் இருங்கள் என்று அடக்கி வைக்கிறார். ஆனாலும் விளையாட்டும் சரியில்லை, பேச்சும் சரியில்லை என்று சொல்வதற்கு ஏற்ப சௌந்தர்யாவின் நடவடிக்கைகள் அனைத்தும் பார்ப்பதற்கு கடுப்பாகத்தான் இருக்கிறது.

அத்துடன் சௌந்தர்யாவுக்கு பிடிக்காத சில நபர்கள் யார் என்றால் ராணவ் மற்றும் மஞ்சரி. இந்த லிஸ்டில் தற்போது ஜாக்லினும் சேர்ந்து விட்டார் போல. ஏனென்றால் கோவா கேங்கை விஜய் சேதுபதி வறுத்தெடுத்த நிலையில் அந்த டீம் தற்போது தனி தனியாக பிரிந்து விட்டது.

அப்போதிலிருந்து ஜாக்குலினை மட்டம் தட்டி பேசுவதும் மற்ற போட்டியாளர்களிடம் புரணி பேசுவதுமாகத்தான் சௌந்தர்யா செய்து வருகிறார். அந்த வகையில் ஜாக்குலினை சௌந்தர்யாவுக்கு பிடிக்கவில்லை. ஆனாலும் தற்போது வரை பல போராட்டங்களையும் பிரச்சனைகளையும் சந்தித்து வரும் ஜாக்குலினை விட சவுந்தர்யாவுக்கு தான் ஒவ்வொரு வாரமும் ஓட்டுகள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.

Trending News