சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

பிக்பாஸ் 5-ல் கலந்துகொள்ளும் சார்பட்டா பரம்பரை நடிகர்.. 90 நாள் தாக்கு பிடிப்பாரா?

விஜய் தொலைக்காட்சியில் 100 நாட்கள் பரபரப்பாக இருக்கும் நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் பட்டாளம் ஏராளமாக உள்ளன. இந்நிகழ்ச்சிக்கு என்ற தனி வரவேற்பு மக்களிடையே இருக்கிறது.

ஒவ்வொரு சீசன் தொடங்கும் போதும் இருக்கின்ற கண்ணோட்டம் அந்த சீசன் முடியும் போது முற்றிலும் வித்தியாசமான கோணத்தில் இருக்கும். சுவாரசியங்கள் நிறைந்த வீடாக பிக்பாஸ் வீடு இருக்கும்.

வீட்டிற்கான கட்டமைப்புகளும், கலைநயமும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பிக்பாஸ் சீசன் 5 தொடங்கப்பட உள்ள நிலையில் அதன் போட்டியாளர்கள் குறித்து பல தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

santhosh prathap
santhosh prathap

சூசன் ,மைனா -நந்தினி, ஜான் விஜய், வடிவுகரசி ,பவானி ரெட்டி ,ஜி .பி .முத்து, அபினாய் ,ஆர் ஜே வினோத் உள்ளிட்ட பல பிரபலங்கள் பங்கு பெறுகிறார்கள் என்ற இணையதளத்தில் செய்திகள் வந்த வண்ணம் உள்ளது.

பிக் பாஸ் சீசன் 5க்கான விளம்பரங்கள் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபலம் கலந்து கொள்ள போவதாக தகவல்கள் கிடைத்துள்ளன. சார்பட்டா பரம்பரை திரைப்படத்தில் ராமன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த சந்தோஷ் பிரதாப் அவர்களும் இந்நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார் என்று கூறப்படுகிறது. திரைப்படத்தின் மூலமாக மிகவும் பிரபலமான இவர் தற்போது பிக்பாஸில் இணைகிறார். ஆனால் இது பற்றி அதிகாரப்பூர்வமான தகவல்கள் இன்னும் வரவில்லை.

Trending News