வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சார்பட்டா பரம்பரை கபிலனாக மாறுவதற்கு ஆர்யா பட்ட கஷ்டம் தெரியுமா.? இந்தக் காட்சியை பார்த்து கதறி அழுத சாயிஷா!

தமிழ் சினிமாவில் வெளிவரும் திரைப்படங்கள் அனைத்தும் பலரது உழைப்பும் திறமையும் இருக்கும். இருந்த போதிலும் அனைத்து திரைப்படங்களும் மக்கள் மனதில் நிற்பதில்லை. ஒரு சில படங்களும், ஒரு சில கதாபாத்திரங்கள் தான் எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் மக்களின் மனதை விட்டு நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

விளையாட்டை மையமாக வைத்து திரைப்படம் எடுக்கும் போது ரசிகர்கள் போரடிக்காமல் படம் முழுவதும் சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் நகர்வது ஒரு இயக்குனருக்கு சவாலான விஷயமாகும். அந்த வகையில் தற்போது வெளிவந்து வெற்றியை கொண்டாடிக் கொண்டிருக்கும் “சார்பட்டா பரம்பரை” திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இத்திரைப்படத்தை ரசிகர்கள் மட்டுமின்றி திரைத்துறை சார்ந்தவர்களும், ஆரியாவின் நடிப்பையும் இயக்குனர் ரஞ்சித்தின் தைரியத்தையும் பாராட்டி வருகின்றனர். வெண்ணிலா கபடி குழு ஜீவா போன்ற விளையாட்டை மையமாக வைத்து எடுத்த இயக்குனர் சுசீந்திரன் அவர்கள் இந்த படத்திற்கு கண்டிப்பாக விருதுகள் குவியப் போகிறது என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

இத்திரைப்படத்தில் நடித்திருக்க அனைவருக்கும் இயக்குனருக்கும் தனது வாழ்த்தை தெரிவித்திருக்கிறார். சார்பட்டா பரம்பரை திரைப்படம் 1975 காலகட்டத்தில் வட சென்னையில் நடந்த சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் ஒவ்வொரு கதாபாத்திரமும் கதாநாயகனாகவும் வில்லனாகவும் தோன்றியுள்ளனர். ஆர்யாவின் கடின உழைப்பிற்கு ரசிகர்களிடையே பெயர் ஆதரவு கிடைத்துள்ளது திரைப்படத்திற்காக ஆர்யா அவருடைய உடல் எடையை அதிகரித்தும் குறைத்தும் கடுமையான உடற்பயிற்சி செய்தும் இருக்கிறார் 7 நாட்கள் ஜட்டியுடன் காட்சிகள் எடுக்கப்பட்டதாகவும் தண்ணீர் கூட குடிக்காமல் இருந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

சண்டை காட்சிகள் அனைத்தும் உண்மையாகவே எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆர்யாவுக்கு தொடர்ந்து ஷார்ட்ஸ் இருந்ததால் அவர் தொடர்ந்து அடி வாங்கியதாகவும் ரெஸ்ட் எடுக்க கூட நேரமில்லாமல் அவர் கடுமையாக உழைத்து இருந்ததாகவும் கூறுகிறார்கள்.

இந்த சூழ்நிலையில் ஆர்யாவின் மனைவி சாயிஷா பார்த்தபோது கதறி அழுது விட்டாராம். இதனை ஒரு பேட்டியில் ஆர்யா குறிப்பிட்டிருந்தார். ஆர்யாவின் எத்தகைய உழைப்பு அவருடைய திரைப்பயணத்தில் ஒரு மைல் கல்லாக இத்திரைப்படம் அமையும் என்று அனைவரும் வாழ்த்துக்களை தெரிவிக்கின்றனர்.

sarpetta arya

Trending News