செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

அதிக விலைக்கு விற்கப்பட்ட ஆர்யாவின் சார்பட்டா பரம்பரை.. தலைகால் புரியாமல் ஆடும் பா.ரஞ்சித்!

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கியுள்ள படம் சார்பட்டா பரம்பரை. ஆர்யா முதன்மை கதாபாத்திரத்தை ஏற்று நடித்துள்ளார். இவருடன் துஷாரா, கலையரசன், பசுபதி மற்றும் சந்தோஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

1980களில் நடக்கும் குத்துச்சண்டையை மையமாக கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சில நாட்களுக்கு முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

தொடர்ந்து படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பலரது பாராட்டுக்களைப் பெற்றது. தற்போது எல்லா பணிகளும் முடிந்துள்ள நிலையில், கொரோனா இரண்டாம் அலை காரணமாக படத்தை ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளனர்.

மேலும், முன்னணி நிறுவனமான அமேசான் ப்ரைம் தளத்தில் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்யப்பட்டு, ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்நிலையில், இப்படம் ஆர்யாவின் திரை வரலாற்றிலேயே அதிக வியாபாரம் செய்யப்பட்ட படமாக சாதனை படைத்துள்ளது.

இதுவரை மொத்தமாக இந்த படம் 50 கோடி ரூபாய் அளவுக்கு வியாபாரம் செய்யப்பட்டுள்ளதாம். அதில் டிஜிட்டல் ரைட்ஸ் மட்டும் 31 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால் ஆர்யா மற்றும் படக்குழுவினர் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர்.

arya pasupathi in sarpetta

Trending News