புதன்கிழமை, ஜனவரி 15, 2025

OTT தளத்தில் வெளியாக உள்ள சர்பேட்டா பரம்பரை.. அதிரடி காட்டிய பா.ரஞ்சித், கடும் கோபத்தில் ஆர்யா!

மெட்ராஸ், காலா, கபாலி படங்களின் இயக்குனர் பா.ரஞ்சித். சாதிய அடக்குமுறை கீழ்க்குடி மேற்குடி பிரிவினைவாதம் பற்றி எளிதில புரியும் படி தெளிவுபட எடுத்துரைக்கும் தெளிவான இயக்குனர் இவர்.

இவர் தொட்ட எல்லா படங்களும் ஹிட்டோ ஹிட் தமிழில் சில படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இப்போது இந்தி படம் ஒன்றும் இயக்குவதற்கு தயாராகி வருகிறார்.

இப்போது நடிகர் ஆர்யாவை வைத்து இயக்கிய “சர்பேட்டா பரம்பரை” படத்தினை அமேசான் ப்ரைமில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகின்றன.

ஆர்யா நடிப்பில் ஏற்கனவே “டெடி” என்கிற படத்தை ஆன்லைனில் வெளியிடப்பட்டது நல்ல வரவேற்பை பெற்ற இப்படம் ஆன்லைன் ரிலீஸ் என்பதால் மட்டுமே பெரிய வசூலை பெறவில்லை என நம்புகிறார் ஆர்யா.

அதனாலோ என்னவோ அடுத்த படத்தையும் ஆன்லைனில் வெளியிடுவதற்கு மிகவும் யோசிக்கிறார் போலும். தியேட்டர்கள் திறப்பதற்கு தாமதம் ஆவதால் கடன் வாங்கிய தயாரிப்பாளர்களுக்கு வட்டி அதிகரித்துக் கொண்டே போகின்றது. இதனால் இதுபோன்ற முடிவுகள் எடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடும்.

எது எப்படியோ முதலாளி என்றால் லாபத்தை மட்டுமே பார்ப்பார், இதனால் பா ரஞ்சித் எடுத்துள்ள முடிவை கோலிவுட் வட்டாரங்கள் ஒருபுறம் எதிர்ப்பு இருந்தாலும் மற்றொருபுறம் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். ஆனால் ஆர்யா தொடர்ந்து தனது மூவி OTT தளத்தில் வெளிவருவதால் சற்று கோபத்தில் உள்ளாராம்.

sarpatta
sarpatta

Trending News