ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

சார்பட்டா பரம்பரை படத்திற்கு கிடைத்த புதிய அங்கீகாரம்.. ரஞ்சித் வெளியிட்ட புகைப்படம்!

தற்போது கோலிவுட் வட்டாரத்தில் அனைவராலும் பேசப்பட்டு வரும் ஒரு படம் என்றால் அது சார்பட்டா பரம்பரை படம் தான். இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் நடித்து வெளியான படம் தான் சார்பட்டா பரம்பரை. கடந்த 22ஆம் தேதி அமேசான் பிரைமில் இப்படம் வெளியானது முதல் தற்போது வரை அனைவரும் இப்படத்தை பாராட்டி வருகின்றனர்.

இப்படத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து கதாபாத்திரங்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. கபிலன், வெற்றி, டான்ஸிங் ரோஸ், ரங்கன் வாத்தியார், வேம்புலி, மீரான், மாஞ்சா கண்ணன், மாரியம்மா, கெவின் டாடி என அனைத்து கதாபாத்திரங்களையும் ரஞ்சித் செதுக்கி உள்ளார். அவர்களும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர்.

இப்படத்தில் நடித்துள்ள அனைத்து நடிகர்களும் தங்களது முழு திறமையையும், உழைப்பையும் கொடுத்துள்ளனர். ஆர்யா இப்படத்திற்காக தன்னையே அர்ப்பணித்து உள்ளார் என்று தான் கூற வேண்டும். அந்த அளவிற்கு தனது உடல் அமைப்பை குத்துச்சண்டை வீரர் போன்று மாற்றி கடினமாக உழைத்துள்ளார்.

இப்படத்திற்கும், இப்படத்தில் நடித்துள்ள நடிகர்களுக்கும் நிச்சயமாக விருது கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அந்த அளவிற்கு அனைவரும் தங்களது திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

இந்நிலையில், இப்படத்திற்கு ஒரு புதிய அங்கீகாரம் கிடைத்துள்ளது. Film companion எனும் நிறுவனம் சார்பாக சிறந்த படத்திற்கு வழங்கப்படும் FC GOLD என்கிற அங்கீகாரம் சார்பட்டா படத்திற்கு கிடைத்துள்ளது. இந்த தகவலை இயக்குனர் ரஞ்சித் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

sarpetta-pa-ranjith
sarpetta-pa-ranjith

Trending News