புதன்கிழமை, ஜனவரி 22, 2025

இரண்டு படத்தால் தயாரிப்பதையே நிறுத்திய  சசிகுமார்.. அடுத்தடுத்து நச்சுன்னு செம லைன் அப்பில் கிடாரி 

சசிகுமாரை இயக்குனரா, நடிகரா எல்லோருக்கும் தெரியும் ஆனால் அவர் பல வெற்றி படங்களை தயாரித்தும் உள்ளார்.சுப்பிரமணியபுரம், நாடோடிகள், ஈசன், அப்பா, கிடாரி போன்ற படங்களை தயாரித்ததும் சசிகுமார் தான்.  இப்பொழுது நடிப்பில் முழு கவனம் செலுத்தி வருகிறார்.

இதற்கிடையில் தயாரிப்பதை இரண்டு படங்கள்    கொடுத்த நஷ்டத்தால் முற்றிலும் நிறுத்திவிட்டார். நல்ல நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து மட்டும் வருகிறார்.  தற்சமயம் பக்காவான இயக்குனர்களுடன் அடுத்தடுத்த லைன் அப் வைத்திருக்கிறார். இவர் நடித்த அயோத்தி படம் இவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றது .

 நாநா, எவிடன்ஸ், பகைவனுக்கு அருள்வாய் போன்ற படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் அனைத்தும் முடியும் தருவாயில் இருக்கிறது, இதுபோக அவர் கமிட் செய்துள்ள படங்கள் எல்லாம்  சூப்பர் கூட்டணியாக இருக்கிறது. 

சசிகுமாரி இப்பொழுது ராஜிமுருகன் இயக்கத்தில் ஒரு படம் பண்ணிக் கொண்டிருக்கிறார்.  இதனை முடித்த பிறகு அயோத்தி பட இயக்குனர் மந்திர மூர்த்தியுடன் ஒரு படம்  கமிட்டாகி  இருக்கிறார். கிடா படத்தின் இயக்குனர் மற்றும் க/ பெ  ரண சிங்கம் பட இயக்குனர்களுடனும் கூட்டணி போடுகிறார்.

இந்த கூட்டணி அனைத்தும் நன்றாக இருக்கிறது. இதை முடித்துவிட்டு மீண்டும் தனக்கு அடையாளம் தந்த இயக்குனர் பார்முலாவை கையில் எடுக்கிறார். கொடிவீரன் மற்றும் பலே வெள்ளையத்தேவா படங்களை தயாரித்து அடி வாங்கிய சசி மீண்டும் தயாரிப்பையும் தொடங்கவிருக்கிறார்.

Trending News