கொரோனவால் பாதிக்கப்பட்டு சசிகலா பூரண குணமடைந்து நேற்றைய தினம் பெங்களூரிலிருந்து சென்னை வந்தடைந்தார். சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு 4 வருட தண்டனைக் காலம் முடிந்து தமிழகம் திரும்பிய சசிகலாவிற்கு மக்கள்,தொண்டர்கள் மத்தியில் அதிக வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.
சண்டா மேளம் முழங்க சென்னையில் அமமுக கட்சி நிர்வாகிகள் வரவேற்றுள்ளனர். சென்னை உள்ளே வருவதற்கு முன்னதாக அவர் காரில் பொருத்தப்பட்டிருந்த அதிமுகவின் கொடியை நீக்குமாறு தெரிவித்தனர். இதனால் அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஒருவரின் காரில் பயணம் செய்து சென்னை வந்தடைந்தார் சசிகலா.
சசிகலாவிற்கு பல நெருக்கடிகள் கொடுக்கப்பட்டாலும் தொண்டர்கள் வரவேற்று உற்சாகப்படுத்தினர் அதிகாலை 4 மணிக்கு சென்னை வந்தடைந்த சசிகலா, ராமாபுரம் எம்ஜிஆர் தோட்டத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உள்ளார்.
கிட்டத்தட்ட 23 மணி நேரம் பயணம் செய்துள்ளார், அந்த பயணத்தில் சசிகலாவுக்கு ஓட்டி வந்த டிரைவர் 25 வருடகாலமாக ஜெயலலிதாவிடம் விஸ்வாசமாக வேலை பார்த்த உள்ளாராம். அதே டிரைவர் தான் தற்போது சசிகலாவை பெங்களூரில் இருந்து சென்னை வரை அழைத்து வந்துள்ளார்.
சென்னை வந்தவுடன் சசிகலாவிற்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உடல் நலம் விசாரித்துள்ளார். 23 மணி நேரம் பயணம் செய்தும் கொஞ்சம் கூட டயர்ட் ஆகாது சசிகலா டி நகர் வீட்டில் தற்போது தங்கியுள்ளாராம்.
அம்மாவின் நினைவிடம் திறந்த பின் கண்டிப்பாக அங்கு செல்வார் என்றும் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றும் வெளிப்படையாக தெரிவித்துள்ளார். டிடிவி தினகரன் சென்னையில் அம்மாவோட ஆர் கே நகர் தொகுதி அல்லது தேனி மாவட்டத்தில் போட்டியிட போவதாக தெரிவித்துள்ளார்.