சொத்துக்குவிப்பு வழக்கில் நான்காண்டு காலம் சிறையிலிருந்த சசிகலா. தற்போது விடுதலை செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகாலம் கர்நாடக மாநிலத்தில் உள்ள அக்ரஹாரா சிறையில் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சில நாட்களுக்கு முன்பு பெங்களூர் அரசு சசிகலா விடுதலை செய்வதாக தகவல்களை தெரிவித்தனர்.
ஆனால் சசிகலா விடுதலை செய்வதற்கு முன்பே அவருக்கு கொரானா தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் விக்டோரியா அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை வார்டில் சசிகலாவுக்கு சிகிச்சை அளித்து வந்தனர்.
தற்போது மருத்துவமனை தரப்பிலிருந்து சசிகலாவிற்கு கொரானா தொற்று குறைந்துள்ளதாகவும் , கொரானா தொற்றுக்கான அறிகுறி எதுவும் இல்லை, தற்போது சுயநினைவுடன் நலமாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே சசிகலாவை புதன்கிழமை அன்று விடுதலை செய்வதாக பெங்களூர் அரசு அறிவித்தது. தற்போது சசிகலா மருத்துவமனையில் இருப்பதால் நேரடியாக மருத்துவமனைக்கு சென்று விடுதலை செய்வதற்கான ஆவணங்களில் கையெழுத்து வாங்கிவிட்டு அவர் விடுதலை செய்யப்படுவார் என தெரிவித்துள்ளது.
மேலும் சசிகலா ஒரு சில வாரங்கள் மருத்துவமனையில் கொரானா காண அறிகுறிகளை பரிசோதனை செய்துவிட்டு. ஏதாவது ஒரு ஹோட்டலில் சில நாட்கள் தனிமையாக தங்கியிருந்துவிட்டு பின்பு தமிழகத்திற்கு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.
சசிகலா அரசியலில் ஒரு முக்கிய நபர் என்பதால் அவருக்கு சிகிச்சை அளிக்கப்படும் வீடியோ பதிவு செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நான்காண்டு கால சிறை தண்டனை முடிந்ததால் தற்போது விரைவில் சசிகலா தமிழகத்திற்கு திரும்புவார் என அரசியல் பிரமுகர்கள் கூறிவருகின்றனர். இவர் வருகையால் தமிழ்நாட்டில் கண்டிப்பாக அரசியல் மாற்றம் நிகழும்.