சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறையில் இருந்து விடுதலையாகி தமிழகம் வந்துள்ள சசிகலாவின் திட்டம் செல்லுபடியாகாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஏனென்றால் சசிகலா சென்னைக்கு வந்த பிறகு தமிழக அரசியல் களம் மாறும் என திமுகவினரும், பத்திரிக்கையாளர்களும் எதிர்பார்த்த நிலையில் சசிகலா வந்து கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்கு மேல் ஆகியும், சசிகலாவும் தினகரனும் போட்ட திட்டம் எதுவும் செல்லுபடியாகவில்லை.
அதுமட்டுமில்லாமல் சசிகலா வெளியே வந்ததும், பல அமைச்சர்கள் பயந்து நடுங்கி நிறம் மாறுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருந்த நிலையில், தற்போது வரை அனைத்து அமைச்சர்களும் எடப்பாடி கே பழனிச்சாமி அவர்களின் அணியிலேயே பலமாக கைகோர்த்து நிற்கின்றனர்.
மேலும் அமைச்சர் ஜெயக்குமார், சிவி சண்முகம் போன்றோர் தொடர்ந்து சசிகலா விற்கும் தினகரனுக்கு எதிராக ஊடகங்களில் தங்களது எதிர்மறையான கருத்துக்களை வெளிப்படுத்தி வருகின்றனர். அதேபோல் தமிழக முதல்வர் தனது சிறப்பான ஆளுமையினால் தமிழகத்தை சாமர்த்தியமாக ஆட்சி செய்து வருகிறார்.
எனவே சசிகலாவின் எதிர்பார்ப்பு வீணானது மட்டுமல்லாமல் அதிமுக கட்சி உடைவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை எடப்பாடி கே பழனிசாமி அவர்கள் ஆணித்தரமாக நிரூபித்து வருகிறார்.