வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கொரோனா காலத்தில் 2 கதைகளை உருவாக்கியுள்ள பிரபல தாடி இயக்குனர்.. வாய்ப்பு கொடுங்க பாஸ் என கூறும் பிரபலங்கள்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சசிகுமார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே ஓரளவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வசூல் சாதனை படைத்து வருகிறது. இருப்பினும் மற்ற நடிகர்களை போல வசூலிலும், வெற்றியிலும் பெரிய அளவு நிலை நிறுத்தவில்லை என்று தான் கூற வேண்டும்.

ஆனால் சசிகுமார் இயக்குனராக சுப்பிரமணியபுரம் எனும் படத்தில் கால்பதித்து பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றார். இப்படம் தமிழில் வெற்றியடைய ஹிந்தி மற்றும் அனைத்து மொழிகளிலும் பல்வேறு இயக்குனர்கள் டப்பிங் செய்து வெளியிட்டனர். அந்த அளவிற்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

சசிகுமாரிடம் ரசிகர்கள் பலரும் கேட்க கூடிய ஒரே கேள்வி எப்போது படத்தை இயக்கியவர்கள் என்பதுதான். அதற்கு அவர் நான் படம் தயாரித்து அதில் ஒரு சில நஷ்டங்கள் ஏற்பட்டு உள்ளேன் தற்போது அதனை மீட்டுக்கொள்ள தான் படத்தில் நடித்து வருவதாகவும் விரைவில் நீங்கள் நினைத்தபடி படத்தை இயக்குவேன் எனவும் கூறினார்.

sasikumar
sasikumar

மேலும் தற்போது கொரோனா ஊரடங்கு காலத்தில் 2 கதைகளை உருவாக்கி வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும் சசிகுமார் நடித்த எம்ஜிஆர் மகன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்ற பிறகு முழுநேர இயக்குனராகவும் களத்தில் இறங்குவார் என அவரது நெருங்கிய வட்டாரங்கள் கூறுகின்றன.

அதுமட்டுமில்லாமல் இந்த 2 கதைகளிலும் முன்னணி நடிகர்களை இயக்குவதற்கு சசிகுமார் முயற்சி செய்து வருவதாகவும் 2 நடிகர்களும் கதையை கேட்டுவிட்டு தற்போது ஒரு நடிகர் ஒப்புக்கொண்டதாகவும், மற்றொரு நடிகர் ஒரு சில மாற்றங்கள் மட்டும் சொன்னதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் சசிகுமார் விரைவில் முழுநேர இயக்குனராக களத்தில் இறங்கி அதிகமான படங்களை இயக்கி வெற்றி பெறுவார் என சினிமா வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

Trending News