புதன்கிழமை, ஜனவரி 15, 2025

திருமணத்திற்கு முன்பே அந்தரங்க உறவு தவறு இல்ல.. ஓப்பனாக போட்டுடைத்த சசிகுமார் பட குடும்ப குத்து விளக்கு

இப்போதெல்லாம் லிவிங் ரிலேஷன்ஷிப் என்பது சர்வ சாதாரணமாகிவிட்டது. வெளிநாட்டில் பின்பற்றப்பட்டு வந்த இந்த கலாச்சாரம் இப்போது மெல்ல மெல்ல இங்கும் பரவ ஆரம்பித்துவிட்டது. அதிலும் பல முன்னணி நடிகைகள் திருமண உறவை தவிர்த்து விட்டு இதற்கு தான் முக்கியத்துவம் தருகின்றனர்.

இது பற்றி இளம் நடிகை அதுல்யா ரவியிடம் ஒரு பேட்டியில் கேட்கப்பட்டது. சசிகுமாரின் நாடோடிகள் 2 படத்தின் மூலம் அதிக அளவில் பிரபலமான இவர் முருங்கைக் காய் சிப்ஸ் உள்ளிட்ட படங்களிலும் நடித்திருக்கிறார். அது மட்டுமின்றி ஆரம்பத்தில் குடும்ப குத்துவிளக்காக இருந்த இவர் இப்போது கிளாமர் கேரக்டர்களிலும் கலக்கி வருகிறார்.

Also Read: வெற்றிமாறனுடன் கூட்டணி போடும் சசிகுமார்.. மீண்டும் கதாநாயகனாக அவதாரம் எடுக்கும் சூரி

அந்த வகையில் இவர் லிவிங் ரிலேஷன்ஷிப் பற்றி வெளிப்படையாக மனம் திறந்து பேசி உள்ளார். அவர் கூறி இருப்பதாவது, திருமணத்திற்கு முன்பு இது போன்ற உறவில் இருப்பதை இப்போது பலரும் விரும்புகிறார்கள். அதை நாம் தவறு என்று சொல்ல முடியாது.

அது அவரவர்களின் விருப்பம். அதில் தலையிட யாருக்கும் எந்த உரிமையும் கிடையாது. ஆனால் என்னை பொருத்தவரை திருமணத்திற்கு பின்பான உறவு தான் சிறந்தது. அதுதான் நம் நாட்டின் பண்பாடு கலாச்சாரம். அதை என்றுமே நாம் மீறக்கூடாது.

Also Read: அப்பவே லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்த முத்துவேல் பாண்டியன் மனைவி.. ரகசியம் அம்பலமானதால் நடந்த திருமணம்

அதேபோன்று 21 லிருந்து 25 வயது என்பது திருமண உறவுக்கு சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன் என தெரிவித்துள்ளார். அதைத்தொடர்ந்து அவரிடம் பலான படங்களை பார்ப்பீர்களா என்ற கேள்வியும் கேட்கப்பட்டது.

அதை முற்றிலுமாக மறுத்த அதுல்யா அந்த மாதிரி படங்களை எல்லாம் நான் என்றுமே பார்க்க மாட்டேன். பார்க்க வேண்டும் என்று நினைத்தது கூட கிடையாது. மற்ற மொழியில் வெளிவரும் சிறந்த படங்களை பார்க்கத்தான் எனக்கு பிடிக்கும் என்று அதிரடியாக கூறியுள்ளார். இப்படி எல்லாவற்றையும் ஓப்பனாக பேசி பலரின் வாயையும் அடைத்துள்ளார் இந்த குடும்ப குத்து விளக்கு.

Also Read: வசமாக சிக்கிய விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா.. ஆதாரத்தோடு வெளியான லிவிங் ரிலேஷன்ஷிப் போட்டோ

Trending News