வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

சுப்ரமணியபுரம் படத்தின் தகவலை முக்கிய பகிர்ந்த படக்குழு.. இணையத்தில் கொண்டாடிய ரசிகர்கள்

சசிகுமார் இயக்கத்தில் ஜெய், சமுத்திரக்கனி, சசிகுமார், சுவாதி, கஞ்சா கருப்பு ஆகியோர் நடிப்பில் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி, பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பிய படம் தான் சுப்ரமணியபுரம். இப்படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

மதுரையை பின்னணியாக கொண்டு 80களில் நடக்கும் கதைக்களமாக இப்படம் அமைந்திருந்தது. இப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. இதன் மூலமே ஜெய் சிறந்த நடிகராக அறியப்பட்டார். மேலும், இப்படத்தை விட படத்தில் இடம் பெற்ற கண்கள் இரண்டால் எனும் பாடல் இளைஞர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகும். இப்போதுவரை இளைஞர்களின் ஆல் டைம் ஃபேவரைட்டாக இப்பாடல் இருந்து வருகிறது. இதைப்போல் இப்படத்தில் இடம்பெற்ற மதுர குலுங்க எனும் பாடலும் பிரபலமான பாடல் ஆகும்.

தமிழ் சினிமாவில் வெளியான சிறந்த திரைப்படங்களின் பட்டியலில் சுப்ரமணியம் படத்திற்கு முக்கிய இடமுண்டு. கமர்ஷியல் மசாலா படங்கள் மட்டுமே அதிகமாக வெளியாகி வெற்றி பெற்று வந்த காலத்தில் ரத்தம் தெறிக்க மக்கள் வாழ்வை அப்படியே எடுத்துக் காண்பித்த சுப்ரமணியபுரம் கோலிவுட்டையே கலக்கியது.

subramaniapuram
subramaniapuram

தற்போது சுப்ரமணியபுரம் படம் வெளியாகி 13 ஆண்டுகள் நிறைவடைந்ததை அடுத்து இப்படத்தின் நடிகர்கள் படம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து வருகிறன்றர்.

பிரபல பாலிவுட் இயக்குனர் அனுராக் காஷ்யப் சுப்பிரமணியபுரம் படம்தான் தனக்கு ‘கேங்ஸ் ஆப் வாசிபூர்’ படம் எடுப்பதற்கு இன்ஸ்பிரேஷனாக இருந்தது என்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News