வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

கிழக்குச்சீமையிலே கெட்டப்பில் வெளிவந்த உடன்பிறப்பே போஸ்டர்.. சசிகுமார், ஜோதிகா வேற லெவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் சசிகுமார். இவர் கதாநாயகனாக நடித்த சுப்பிரமணியபுரம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். இப்படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இவரது நடிப்பில் வெளியான படங்கள் அனைத்துமே சமீப காலமாக நல்ல வரவேற்பு பெற்று வருகின்றன.

அதன் பிறகு கிராமத்து கதையில் மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்தார். இவரது நடிப்பில் வெளியான சுந்தரபாண்டியன் குட்டி புலி கிடாரி மற்றும் கொடிவீரன் ஆகிய படங்கள் அனைத்தும் ரசிகருடன் நல்ல வரவேற்பைப் பெற்றன. சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான பேட்ட படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றார்.

தற்போது இவர் ராஜவம்சம், பகைவனுக்கு அருள்வாய், எம்ஜிஆர் மகன் மற்றும் கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்களில் நடித்துள்ளார். இப்படங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து ஜோதிகா மற்றும் சசிகுமார் உடன்பிறப்பே எனும் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெய்ன்மென்ட் தயாரித்துள்ளது. தற்போது இப்படத்தை அமேசன் பிரைம்மில் வருகிற அக்டோபர் மாதம் வெளியிட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

udanpirappe
udanpirappe

சமீபகாலமாக சூர்யா தான் தயாரிக்கும் படங்களில் லாபம் பார்ப்பதில் வல்லவராக இருந்து வருகிறார். பலரும் OTT-யில் வெளியிட தயங்கும் நிலையில் சூர்யா படத்தை தயாரித்தது OTTயில் வெளியிட்டு அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

இப்படத்தை பார்க்கும் போது கிழக்குசீமையிலே நடித்த ராதிகா போலவே இருப்பதாகவும் மேலும் பாசத்தை மையமாகக் கொண்டு உருவாகி இருக்கலாம் என பலரும் கூறி வருகின்றனர். மேலும் இப்படம் கிராமத்தை மையமாக கொண்டுஎடுக்கப்பட்டுள்ளது என படக்குழுவினர் கூறியுள்ளனர்.

Trending News