Nandhan Trailer: சசிகுமார், பிக்பாஸ் பிரபலம் சுருதி ஆகியோர் நடிப்பில் நந்தன் உருவாகி இருக்கிறது. சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். கிராமத்து வாழ்வியல் பற்றிய இந்த படத்தில் சசிகுமாரின் தோற்றமே வித்தியாசமாக இருந்தது.
வரும் செப்டம்பர் 20ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது. அதில் சீமான், ஹெச் வினோத் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டு சசிகுமாரை வாழ்த்தினார்கள்.
மேலும் இப்படத்திற்காக அவர் எந்த அளவுக்கு கஷ்டப்பட்டார் எந்த மாதிரியான கதைக்களம் என அனைத்தையும் அவர்கள் மேடையில் சுவாரசியமாக பகிர்ந்து கொண்டார்கள். அந்த வகையில் பலரும் ஆவலுடன் எதிர்பார்த்த நந்தன் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளிவந்துள்ளது.
கிராமத்து எதார்த்த மனிதரான நாயகன் அரசியல் சூழ்ச்சியின் காரணமாக மாறுவதுதான் படத்தின் கதை. அதன்படி அழுக்கு உடை, வெத்தலை போட்டு கறை படிந்த பற்களுமாக சசிகுமார் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
பெர்ஃபார்மன்சில் மிரட்டும் சசிகுமார்
அதேபோல் பிக்பாஸ் வீட்டில் அல்ட்ரா மாடர்ன் பெண்ணாக பார்த்த ஸ்ருதி இதில் அப்படியே உருமாறி இருக்கிறார். கிழிந்த புடவை கிராமத்து பெண்களுக்கு உரிய மேக்கப் என கவனம் பெறுகிறார். துஷாரா விஜயன் போல் அழுத்தமான கேரக்டர்களில் இவரை அடுத்தடுத்து எதிர்பார்க்கலாம்.
மேலும் இயக்குனர் பாலாஜி சக்திவேல் இதில் சைலன்ட் வில்லனாக இருக்கிறார். அவருக்கு எதிராக அரசியலில் போட்டி போட்டு ஜெயிக்க வரும் சசிகுமார் திடீரென வெள்ளை வேட்டிக்கு மாறி ஊரையே திரும்பிப் பார்க்க வைக்கிறார்.
இதில் அவர் சந்திக்கும் சவால்கள் என்ன எடுத்த முயற்சிகள் ஜெயித்தாரா என பல கேள்விகளுடன் ட்ரெய்லர் முடிகிறது. ரொம்பவும் அழுத்தமான கதை மட்டுமல்லாமல் வசனங்களும் இன்றைய யதார்த்த அரசியலை சுட்டி காட்டுகிறது.
இப்படியாக வெளிவந்துள்ள இந்த ட்ரெய்லர் படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இன்றி சசிகுமாருக்கு இப்படம் நிச்சயம் வெற்றியாக அமைய வேண்டும் என பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவரும் வாழ்த்து கூறி வருகின்றனர்.