செவ்வாய்க்கிழமை, மார்ச் 18, 2025

கடன் பிரச்சினைக்கு ரஜினி கொடுத்த அட்வைஸ்.. மகான் என புகழ்ந்த சசிகுமார்

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் மினிமம் கேரண்டி நடிகராக வலம் வந்தவர் சசிகுமார். என்னதான் சசிகுமார் நடித்த படங்களில் நடித்தாலும் இயக்குனராக அவரை ஒரு கூட்டமே மிஸ் செய்கிறது என்பதுதான் உண்மை. அப்படிப்பட்ட மாபெரும் வெற்றிப்படமாக சுப்பிரமணியபுரம் படத்தை கொடுத்தவர்.

அதன்பிறகு நாடோடிகள் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி பல வெற்றிப் படங்களைக் கொடுத்தார். ஒரு கட்டத்திற்கு மேல் அவர் ஒரே மாதிரியாக படங்கள் செய்கிறார் என்ற மன நிலைக்கு மக்கள் வந்து விட்டதால் கடைசியாக அவர் நடித்த சில படங்கள் தொடர் தோல்வியை சந்தித்தன. அதுமட்டுமில்லாமல் படம் தயாரித்ததில் கடனாளியாக மாறினார்.

அந்தக் கடனையும் கட்டுவதற்காக தற்போது ராப்பகலாக படங்களில் நடித்து வருகிறார். எப்படியோ கஷ்டப்பட்டு முக்கால்வாசி கடனை அடைத்து விட்டதாகவும் இன்னும் கொஞ்சம்தான் இருப்பதாகவும் அவரது வட்டாரத்தில் செய்திகள் கிடைத்துள்ளன. இதற்கெல்லாம் ரஜினி கொடுத்த அட்வைஸ் தான் காரணம் என்பதை அவரே ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய பேட்ட படத்தில் ரஜினியுடன் நடித்தவர் சசிகுமார். அந்த படத்தில் நடித்தபோது ரஜினியிடம் தன்னுடைய கடன் சுமையை பற்றி கூறி வருத்தப்பட்டுள்ளார். அதற்கு ரஜினிகாந்த் எந்த சூழ்நிலை வந்தாலும் படம் மட்டும் தயாரிக்க வேண்டாம் எனவும் அதில் உள்ள கஷ்ட நஷ்டம் அனைத்துமே எனக்கு நன்றாக தெரியும் எனவும் அட்வைஸ் கொடுத்தாராம்.

அதன் பிறகுதான் படம் தயாரிப்பதை நிறுத்தி விட்டு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்ததாகவும் அதனால் தற்போது கடன் பிரச்சினை ஓரளவு தீர்ந்து கொஞ்சம் நிம்மதியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். சசிகுமார் நடிப்பில் அடுத்ததாக ராஜவம்சம் கொம்பு வச்ச சிங்கம்டா ஆகிய படங்கள் ரிலீசுக்கு வரிசையாக காத்துக்கொண்டிருக்கின்றன.

Advertisement Amazon Prime Banner

Trending News