தமிழ் சினிமாவில் ஆரம்ப காலத்தில் இயக்குனராக வெற்றி பெற்றவர் சசிகுமார். இவரது இயக்கத்தில் வெளியான படங்கள் அனைத்தும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அதற்கு காரணம் படத்தின் கதை அம்சம் தான். தமிழ்சினிமாவில் குறிப்பிட்ட இயக்குனர்கள் மட்டுமே கதையை மையமாக வைத்து படத்தை இயக்குவார்கள். அப்படிப்பட்ட இயக்குனர் வரிசையில் சசிக்குமார் இருக்கும் இடம் உண்டு.
ஆனால் சமீபகாலமாக சசிகுமார் படங்கள் இயக்குவதில் இருந்து விலகி நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான சுப்பிரமணியபுரம், பசங்க, சுந்தரபாண்டியன் மற்றும் பேட்ட ஆகிய படங்கள் சசிகுமாருக்கு தமிழ் சினிமாவில் தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தன.
சமீபகாலமாக சசிகுமார் எந்த நிகழ்ச்சிக்கு சென்றாலும் ரசிகர் கேட்கக் கூடிய ஒரே கேள்வி ஏன் நீங்கள் படங்களை இயக்கவில்லை என்பதுதான் அதற்கு பல நாட்களாக மௌனம் சாதித்து வந்த சசிகுமார் தற்போது அதற்கு விடை அளித்துள்ளார். அதாவது படத்தை இயக்குவதற்கான எண்ணம் தனக்கு உள்ளது. ஆனால் அதற்கான சூழ்நிலை அமையவில்லை என கூறியுள்ளார்.
மேலும் சுப்பிரமணியன் படத்தை கொண்டாடிய ரசிகர்கள் என்னிடம் சுப்ரமணியம் படத்திற்கு பிறகு ஏன் இவ்வளவு கேப் என அதிகம் கேட்டனர். ஈசன் படம் முடிந்த பிறகு ஒரு வரலாற்று படத்தை எடுக்க நினைத்தேன். ஆனால் பட்ஜெட் ப்ராப்ளம் காரணமாக அந்த படத்தை என்னால் இயக்க முடியவில்லை.
அதுமட்டுமின்றி படம் தயாரிப்பிலும் தனக்கு கொஞ்சம் நஷ்டம் ஏற்பட்டதால் அதனை எப்படியாவது மீட்டுவிட வேண்டும் என்பதற்காகத்தான் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும். ஆனால் ரசிகர்கள் நினைத்தபடி கண்டிப்பாக படங்களை இயக்குவதில் கவனம் செலுத்துவேன் எனவும் கூறியுள்ளார். அதனால் ரசிகர்கள் சீக்கிரம் படத்தை இயக்கங்கள் என அவருக்கு சமூக வலைதளப் பக்கத்தில் கோரிக்கை வைத்து வருகின்றனர்.