சனிக்கிழமை, ஜனவரி 11, 2025

சசிகுமார் தயாரிப்பில் வெளியான 10 படங்கள்.. அடக்கடவுளே! இத்தனை படம் தோல்வியா

தமிழ் சினிமாவில் நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகத்திறமை கொண்டவர் சசிகுமார். சுப்பிரமணியம் திரைப்படத்தின் மூலம் பலராலும் அறியப்பட்ட பிரபலமானவர் சசிகுமார். இப்படத்தை இவரே தயாரித்து இருந்தார். சசிகுமார் இயக்குனர் பாலா மற்றும் அமீர் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணியாற்றினார். இவர் பல வெற்றிப் படங்களையும் தயாரித்துள்ளார்.

சுப்ரமணியபுரம்: சசிகுமார் தயாரித்து,இயக்கி 2008 இல் வெளியான திரைப்படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் ஹீரோவுக்கு இணையான பரமன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஜெய், சுவாதி, சமுத்திரகனி, கஞ்சா கருப்பு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர. இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்த் இசையமைத்திருந்தார். இப்படம் 80ல் மதுரை மக்களின் வாழ்க்கை முறையை அச்சு அசலாக கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் மிகப்பெரிய வெற்றியை அடைந்தது.

subramaniapuram-cinemapettai-01
subramaniapuram-cinemapettai-01

ஈசன்: சமுத்திரக்கனி, வைபவ், அபர்ணா, அபிநயா, பாஜ்பாய் என பல புதுமுக நடிகர்களை கொண்டு சசிகுமார் இயக்கி, தயாரித்த படம் ஈசன். இப்படத்திற்கு ஜேம்ஸ் வசந்த் இசையமைத்திருந்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ எல் அழகப்பன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை.

பசங்க: சசிகுமார் தயாரிப்பில், பாண்டிராஜ் இயக்கத்தில் 2009 வெளியான திரைப்படம் பசங்க. பல குழந்தை நட்சத்திரங்கள் நடித்து வெற்றிப் படமாக அமைந்தது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. சிறந்த தமிழ் திரைப்படம் மற்றும் சிறந்த வசனம் என இரண்டு பிரிவுகளில் இப்படம் தேசிய விருது பெற்றது. மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்று மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது.

pasanga
pasanga

போராளி: சமுத்திரக்கனி இயக்கத்தில், சசிகுமார் தயாரித்து நடித்த திரைப்படம் போராளி. அல்லாரி நரேஷ், சுவாதி ரெட்டி, வசுந்தரா, கஞ்சா கருப்பு என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் கதைக்கரு மனநலம் குன்றியவர்களை இந்த சமூகம் எப்படிப் பார்க்கிறது, அவர்களை ஒதுக்காமல் எப்படி உதவி செய்வது என்பதை போராளி படம் காட்டுகிறது. இப்படம் வெற்றி பெறவில்லை.

sundarpandiyan
sundarpandiyan

சுந்தரபாண்டியன்: 2012ஆம் ஆண்டு பிரபாகரன் இயக்கத்தில் சசிகுமார் தயாரித்து நடித்த திரைப்படம் சுந்தரபாண்டியன். இப்படத்தில் இனிகோ, லட்சுமிமேனன், விஜய் சேதுபதி, பிரபாகரன், அப்புகுட்டி நரேன் என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தின் கதை நட்பையும், நட்பின் துரோகத்தையும் உணர்த்தும் படமாக இருந்தது. இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வசூலில் சாதனை படைத்தது.

தலைமுறைகள்: சசிகுமார் தயாரிப்பில் பாலுமகேந்திரா இயக்கத்தில் 2013ல் வெளியான திரைப்படம் தலைமுறைகள். இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இப்படத்தில் சசிகுமார், சுப்பிரமணி, ரம்யா ஷங்கர், வினோதினி ,பாலுமகேந்திரா என பலர் நடித்துள்ளார்கள். இப்படம் தமிழ் மக்களின் கலாச்சாரம் மற்றும் தாத்தா பேரன் அன்பை உணர்த்தும் படமாக அமைந்தது. இப்படம் வணிக ரீதியாக பலனில்லை என்றாலும் இப்படத்தை தயாரிக்க முன் வந்த சசிகுமாரை பலரும் பாராட்டினார்கள்.

தாரை தப்பட்டை: பாலா இயக்கத்தில் 2016 இல் வெளியான திரைப்படம் தாரை தப்பட்டை. இப்படத்தை சசிகுமார் தயாரித்து நடித்து இருந்தார். இவருடன் இணைந்து வரலட்சுமி, சரத்குமார் என பலரும் நடித்திருந்தார்கள். இப்படத்தில் இசையமைத்த இளையராஜாவுக்கு தேசிய விருது கிடைத்தது. இப்படத்தில் வில்லனாக ஆர்கே சுரேஷ் பாலா வித்தியாசமான வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் கரகாட்ட குழுவை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டது. இப்படம் எதிர்பார்த்த அளவு சரியாக ஓடவில்லை.

கிடாரி: பிரஷாந்த் முருகேசன் இயக்கத்தில் சசிகுமார் தயாரிப்பில் வெளியான திரைப்படம் கிடாரி. இப்படத்தில் சசிகுமார், நிக்கிதா விமல், நெப்போலியன், சுஜா வருணி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்கள். இப்படத்தில் சசிகுமார் கிடாரியாக நடித்து இருந்தார். துரோகம் , பழிக்குப் பழி கதைக் களத்தை கொண்டு இப்படம் நகரும். இப்படம் வெற்றி பெறவில்லை.

பலே வெள்ளையத் தேவா: சோலை பிரகாஷ் இயக்கத்தில் 2016 இல் வெளியான திரைப்படம் பலே வெள்ளையத் தேவா. இப்படத்தில் சசிகுமார், தன்யா ரவிச்சந்திரன், கோவை சரளா, ரோகிணி என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை சசிகுமார் தயாரித்து இருந்தார். இப்படம் முழு நகைச்சுவை படமாக இருந்தது. இப்படத்தில் சசிகுமார் சக்திவேல் கதாபாத்திரத்தில் அரசு வேலைக்காக காத்திருக்கும் இளைஞனாக நடித்திருந்தார். பல முன்னணி நடிகர்கள் நடித்திருந்தால் இப்படம் வெற்றி பெறவில்லை.

கொடிவீரன்: முத்தையா இயக்கத்தில் சசிகுமார் நடித்து தயாரித்த திரைப்படம் கொடிவீரன். இப்படத்தில் விதார்த், மகிமா நம்பியார், பூர்ணா, பசுபதி என பலர் நடித்திருந்தார்கள். இப்படத்தை கொடிவீரன் சசிகுமார் நடித்திருந்தார். ரகுநந்தன் இப்படத்திற்கு இசையமைத்து இருந்தார். இப்படத்தில் சசிகுமாரின் தங்கையாக சனுஷா நடித்திருந்தார். வன்முறை, பகை, பாசம் என அனைத்தையும் கடந்து இப்படத்தை இயக்கியுள்ளார் முத்தையா. இப்படம் மக்கள் ரசிக்கும்படி இருந்தாலும் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை.

Trending News