வந்தது பெண்ணா வானவில் தானா.. சிம்ரனை வெட்கப்பட வைத்த சசிகுமார்

Sasikumar-Simran: அபிஷன் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன் முதல் முறையாக இணைந்துள்ள படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. வரும் மே 1ஆம் தேதி படம் வெளியாகிறது.

அதே தினத்தில் தான் கார்த்திக் சுப்புராஜ், சூர்யா கூட்டணியின் ரெட்ரோ வெளியாகிறது. இப்படத்தின் பாடல்கள் டீசர் என அடுத்தடுத்து வெளியாகி செம ரெஸ்பான்ஸ் பெற்றுள்ளது.

அதுவே இந்த இரு படங்களும் ஒரே நாளில் வெளியாவது சிறு ஆர்வத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில் டூரிஸ்ட் ஃபேமிலி படம் பற்றி சசிகுமார் சில சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

அதில் சிம்ரனுடன் முதல்முறையாக நடிக்கும் அனுபவம் சந்தோஷமாக இருந்ததாக தெரிவித்துள்ளார். மேலும் 100 படங்களுக்கு மேல அவங்க நடிச்சிருக்காங்க. அந்த அனுபவத்தில் நடிப்பு கூடுதல் மெருகேறி இருக்கிறது.

சிம்ரனை வெட்கப்பட வைத்த சசிகுமார்

நாங்க ஜோடியா நடிக்கிறது எல்லோருக்கும் ஆச்சர்யம் தான். எனக்கே அப்படித்தான் இருந்தது. ஆனால் அந்த கெமிஸ்ட்ரி படத்தில் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது.

என்னோட எல்லா படத்தையும் அவங்க பார்த்து இருக்காங்க. தினமும் அவங்க நடிச்ச படத்தை பத்தி பேசுவோம். அதேபோல் அவர் செட்டுக்கு வரும்போது வந்தது பெண்ணா வானவில் தானா என எல்லோரும் கோரசாக பாடுவோம்.

உடனே வெட்கத்தில் முகம் சிவந்து போயிடுவாங்க. அவங்களுக்கு பிரமாதமான காமெடி சீன்ஸ் இருக்கிறது. அந்த வசீகரமான முகத்தை யாருக்குத்தான் பிடிக்காது என புகழ்ந்து பேசி உள்ளார்.

ஏற்கனவே படம் எப்போது ரிலீஸ் ஆகும் என்ற ஆர்வத்தை மக்கள் மனதில் விதைத்து விட்டது. இதில் அடுத்தடுத்து வெளிவரும் போட்டோக்களும் படம் பற்றிய சுவாரசியமான தகவல்களும் ப்ரோமோஷன் ஆக அமைந்துள்ளது.

Leave a Comment