சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

நயன்தாரா உதாசீனப்படுத்தியதால் ஜெயித்துக் காட்டிய சசிகுமார்.. இப்போ தலைகீழாக மாறிய பரிதாபம்

Nayanthara and Sasikumar: நயன்தாரா சினிமாவிற்குள் நுழைந்து கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆன நிலையில் 75 படங்களை வெற்றிகரமாக நடித்து முடித்து இருக்கிறார். இதற்கு இடையில் நயன்தாராவின் கேரியரில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்திய படம் என்றால் அது விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளிவந்த பில்லா படம் தான்.

இப்படத்திற்கு பிறகு தான் நயன்தாராவின் மார்க்கெட்டே உயர்ந்து விட்டது. ஒரு ஸ்டைலிஷ், மாஸ் லுக் ஹீரோயின் என்று ரசிகர்கள் இவரை கொண்டாட ஆரம்பித்தார்கள். இதனைத் தொடர்ந்து நிறைய பட வாய்ப்புகளும் அவருக்கு குவிந்தது. அந்த சமயத்தில் சசிகுமார் இயக்குனராக சுப்ரமணியபுரம் படத்தில் பயணத்தை தொடங்க ஆரம்பித்தார்.

அப்பொழுது அதற்கான கதையெல்லாம் தேர்வு செய்து நடிகர் ஜெய்யையும் ஹீரோவாக கமிட் பண்ணி விட்டார். அதே மாதிரி ஜெய்க்கு ஜோடியாகவும், கதைக்கு ஏற்ற நாயகியாகவும் நயன்தாரா நடித்தால் கண்டிப்பாக அந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும் என்று சசிகுமார் நினைத்திருக்கிறார்.

அதனால் நயன்தாராவிடம் நேரடியாக சசிகுமார் போய் பேசி அவருடைய விருப்பத்தை தெரிவித்து இருக்கிறார். ஆனால் நயன்தாரா யோசித்தது என்னவென்றால் சசிகுமார் புது இயக்குனர் ஜெய்-யும் புதுமுகம் இவர்களுடன் கூட்டணி வைத்தால் தற்போது வளர்ந்து வரும் நம்முடைய மார்க்கெட் போய்விடும் என்று நினைத்திருக்கிறார்.

அதனால் சசிகுமார் கேட்டதற்கு என்னால் உங்கள் படத்தில் நடிக்க முடியாது என்று மூஞ்சில் அடித்தபடி சொல்லி அவரை இன்சல்ட் பண்ணி வெளியே அனுப்பி இருக்கிறார். ஆனாலும் சசிகுமார் பல வழிகளில் முயற்சி செய்து பார்த்திருக்கிறார். ஆனால் எதற்குமே அசராத நயன்தாரா, சசிகுமாரை உதாசீனப்படுத்தி விட்டார்.

பரிதாபமாக மாறிய நயன்தாராவின் நிலைமை

அதன் பிறகு தான் நடிகை சுவாதி கமிட் ஆகி நடித்தார். ஆனால் இப்படம் யாருமே எதிர்பார்க்காத அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வசூல் ரீதியாக பல கோடியை சம்பாதித்து விட்டது. அதாவது
65 லட்சத்தில் எடுக்கப்பட்ட இப்படம் 30 கோடி அளவில் வசூலை குவித்து விட்டது.

இதுவே நயன்தாராவுக்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி இருக்கும். அத்துடன் விடாமல் தற்போது நயன்தாராவின் நிலைமை மிகவும் பரிதாபமாக இருக்கிறது. சரியா பட வாய்ப்பு இல்லை, நடித்த படங்களும் பெருசாக ஓடுவதில்லை.

இதனால் துவண்டு போய் இருக்கும் நயன்தாரா, அடுத்து சசிகுமார் இயக்கப் போகும் படத்திற்கு ஹீரோயினாக நடிப்பதற்கு பேச்சுவார்த்தை போய்க்கொண்டிருக்கிறது. இதே தான் சொல்வார்கள் வாழ்க்கை ஒரு வட்டம் மேலே இருப்பவர்கள் கீழே வரலாம், கீழே இருப்பவர்கள் மேலே வந்தாகணும் என்று. அதற்கு தகுந்த விடாமுயற்சியை எடுத்துக்கொண்ட சசிகுமாருக்கு வெற்றி நிச்சயம்.

Trending News