புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

குடும்பத்தோடு ஊரை விட்டு ஓடும் சசிகுமார், சிம்ரன்.. கலகலப்பாக வெளிவந்த டைட்டில் டீசர்

Tourist Family Title Teaser: இப்படி ஒரு கதையை பார்த்து ரொம்ப நாளாச்சு என சொல்வது போல் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார் சசிகுமார். சமீபத்தில் இவருடைய நந்தன் கண் கலங்க வைத்தது.

அதற்கு நேர் மாறாக வந்திருக்கிறது அவரின் அடுத்த பட டைட்டில் டீசர். அபிஷான் ஜீவிந்த் இயக்கத்தில் சசிகுமார், சிம்ரன், யோகி பாபு ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளனர்.

டூரிஸ்ட் ஃபேமிலி என பெயரிடப்பட்டுள்ள இந்த டீசர் வைரல் ஆகி வருகிறது. இதன் ஆரம்பத்திலேயே சசிகுமார் தன் குடும்பத்தோடு ஊரை விட்டு ஓட பிளான் பண்ணுகிறார்.

இலங்கை தமிழில் அவர்கள் பேசுவது போல் உள்ளது. அதில் சிம்ரன் மற்றும் இரு மகன்கள் சசிகுமாரின் டென்ஷன் புரியாமல் சொதப்புகின்றனர்.

சசிகுமாரின் டூரிஸ்ட் ஃபேமிலி

அதையெல்லாம் சமாளித்து எப்படியோ அவர்கள் ஊரை விட்டு ஓடுவது போல் டீசர் வந்துள்ளது. அதிலும் இயல்பாக பேசும் அவர்களின் வசனங்கள் நகைச்சுவை மூட்டுகிறது.

ஓடும்போது எனக்கு ஏதாவது ஆயிடுச்சின்னா என சசிகுமார் சொல்கிறார். உடனே சிம்ரன் இன்னொரு கல்யாணம் மட்டும் பண்ண சொல்லாதீங்க என சொல்லும் இடம் அலப்பறை.

அதேபோல் போலீசிடம் சிக்கினால் என்ன செய்வீர்கள் என மகனிடம் கேட்கிறார். உடனே அப்பா தான் பிளான் போட்டது என சொல்வோம் என்கின்றனர்.

இப்படி ஒரு ஃபேமிலியை வைத்துக்கொண்டு பயங்கர பிளான் போடும் சசிகுமாரின் அவஸ்தை தான் இப்படம். இப்படி எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள டூரிஸ்ட் ஃபேமிலிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

- Advertisement -

Trending News