வெள்ளிக்கிழமை, ஜனவரி 17, 2025

விஜய் சேதுபதியின் சூப்பர் ஹிட் பட இயக்குனருடன் சேர்ந்த சசிகுமார்.. சென்டிமெண்ட்டா டச் பண்ணிருவாங்களோ!

கிராமத்து படங்களில் நடித்து வெற்றி கொடுப்பதில் கைதேர்ந்த சசிகுமார் தற்போது விஜய் சேதுபதிக்கு சமீபத்தில் சூப்பர் ஹிட் படம் கொடுத்த இயக்குனர் உடன் கைகோர்த்துள்ள செய்தி கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

தயாரிப்பாளர் மற்றும் இயக்குனராக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் தான் சசிகுமார். சுப்ரமணியபுரம் என்ற சூப்பர்ஹிட் படத்தை தொடர்ந்து நாடோடிகள் படத்தின் மூலம் அனைத்து இளைஞர்கள் மத்தியிலும் நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நடிகராக மாறிவிட்டார்.

சசிகுமாரின் பெரிய பிரச்சனை என்னவென்றால் ஒரே மாதிரியான திரைக்கதைகளில் நடித்து வருவது தான். ஒரு சில படங்கள் சூப்பர் ஹிட் அடித்தாலும் சமீபகாலமாக அவரது கதை தேர்வு ரசிகர்களைச் சலிப்படைய வைக்கிறது.

இதனால் அவரது படங்கள் தொடர் தோல்விகளை சந்தித்துக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் எப்படியாவது ஒரு சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து விட வேண்டும் என தற்போது ராஜவம்சம், பொன்ராம் இயக்கத்தில் எம்ஜிஆர் மகன் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீஸுக்கு தயாராக உள்ளன.

வெற்றி பெற்ற இயக்குனருடன் கைகோர்க்க வேண்டுமென முடிவு செய்துள்ள சசிக்குமார் அடுத்ததாக விஜய்சேதுபதிக்கு சமீபத்தில் க/பெ ரண சிங்கம் என்ற வெற்றி படத்தை கொடுத்த விருமாண்டி என்பவருடன் ஒரு படத்தில் இணைய உள்ளாராம்.

ka-pae-ranasingam-cinemapettai
ka-pae-ranasingam-cinemapettai

இந்த படமும் க/பெ ரண சிங்கம் படத்தை போல ஒரு முக்கியமான சமூக கருத்தை எடுத்துரைக்கும் என்கிறார்கள் பட விவரம் தெரிந்தவர்கள். சசிகுமாரும் எப்படியாவது ஒரு வெற்றி பெற்றுவிட வேண்டும் என முட்டி மோதி கொண்டிருக்கிறார். இந்த படமாவது கைகொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Trending News