செவ்வாய்க்கிழமை, ஜனவரி 14, 2025

பழைய ரூட்டை கையில் எடுக்கும் சசிகுமார்.. இனி உங்க சங்கார்த்தமே வேண்டாம்

Sasikumar : சசிகுமார் நடிப்பில் நந்தன் என்ற படம் உருவாகி இருக்கிறது. இந்த படத்தின் பாடல் இன்று வெளியாக உள்ளது. இந்த சூழலில் சசிகுமார் திடீரென ஒரு முடிவு எடுத்து இருக்கிறார். பொதுவாகவே இயக்குனர்களுக்கு ஹீரோ ஆக வேண்டும் என்ற கனவு இருந்து வருகிறது.

அந்த வகையில் தான் சசிகுமார் இயக்கத்தை கைவிட்டு விட்டு தொடர்ந்து படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆரம்பத்தில் இவர் நடித்த சுந்தரபாண்டி, குட்டி புலி போன்ற படங்கள் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால் அதன் பிறகு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு அவருக்கு பெரிய படங்கள் எதுவும் போகவில்லை.

ஆனாலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் மீண்டும் சசிகுமார் படங்களை இயக்க உள்ளதாக கூறியிருந்தார். இந்த செய்தி அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் சசிகுமாரின் இயக்கத்தில் வெளியான சுப்பிரமணியபுரம் படம் இப்போதும் பலராலும் பேசப்பட்டு வருகிறது.

சசிகுமார் எடுத்த திடீர் முடிவு

இவ்வாறு சில அருமையான படத்தை கொடுத்துவிட்டு படங்களில் நடிக்க சென்றது அவரது ரசிகர்கள் மத்தியில் சற்று வருத்தமாக தான் இருந்தது. மேலும் இப்போது சசிகுமார் படத்தை இயக்குவதாக சொன்னவுடன் சுப்பிரமணியபுரம் போல் ஒரு படத்தை கொடுங்கள் என ரசிகர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மேலும் டைரக்ஷன் பக்கம் சசிகுமார் சென்றால் இனி உங்கள் சங்கார்த்தம் வேண்டாம் என்று நடிப்புக்கு முழுக்கு போடவும் வாய்ப்பு இருக்கிறது. சமீப காலமாக வயல் வரப்பு, கிராமங்கள் சார்ந்த படங்கள் வருவது மிகவும் குறைந்து விட்டது. வெறும் ஆக்சன் மற்றும் ரத்தமும், கத்தியமாக தான் படங்கள் வெளியாகி வருகிறது.

சசிக்குமாரின் படங்களில் இது போன்ற ஆக்சன் காட்சிகள் இடம் பெற்றாலும் ஒரு எதார்த்தமான படமாகத்தான் இருக்கும். கண்டிப்பாக சசிகுமாரின் இந்த முடிவு அவருக்கு ஒரு நல்ல வெற்றியை தொடர்ந்து கொடுக்கும் என எதிர்பார்க்கலாம்.

மீண்டும் பழைய ரூட்டுக்கு வரும் சசிகுமார்

Trending News