ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

சைக்கோ கில்லராக சதீஷ் மிரட்டும் சட்டம் என் கையில்.. ராட்சசன் போல் வெளிவந்த டீசர் எப்படி இருக்கு.?

Sattam En Kayil Teaser: காமெடி நடிகராக இருந்த சதீஷ் இப்போது கதையின் நாயகனாக பல படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். சில நகைச்சுவை படங்களை தேர்ந்தெடுத்தாலும் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்கள் மொத்தமும் வித்தியாசமாக இருக்கிறது.

அதிலும் சந்தானம் போல் இப்போது அவர் திரில்லர் கதைகளுக்கே முக்கியத்துவம் கொடுக்கிறார். அப்படித்தான் சமீபத்தில் வெளிவந்த கான்ஜுரிங் கண்ணப்பன் கூட திகிலும் நகைச்சுவையும் கலந்து வரவேற்பை பெற்றது.

சைக்கோ கில்லரராக நடிக்கும் சதீஷ்

அதை அடுத்து தற்போது அவர் சட்டம் என் கையில் படத்தில் நடித்து முடித்துள்ளார். மர்மம் திகில் கலந்த கதையான இப்படத்தில் சதிஷ் உடன் இணைந்து வித்யா பிரதீப், மைம் கோபி, ரித்திகா என பலர் நடித்துள்ளனர்.

ராட்சசன் படம் போல் கொடூர கொலைதான் இதன் கதைகளம். டீசரின் ஆரம்பத்திலேயே மர்மமான முறையில் ஒரு பெண் இறந்து கிடக்கிறார். அதை தொடர்ந்து சதீஷை குற்றவாளி என கைது செய்யும் போலீஸ் அவரிடம் விசாரணை செய்கிறது.

அதை அடுத்து நடக்கும் சம்பவங்கள் காவல்துறைக்கு பெரும் சவாலாக இருக்கிறது. இதில் சதீஷ் யார்? அவர் தான் சைக்கோ கில்லரா? நடந்த அநியாயம் என்ன? என பல ட்விஸ்ட் டீசர் முழுவதும் நிறைந்து இருக்கிறது. செப்டம்பர் 20 ஆம் தேதி வெளிவர இருக்கும் இப்படம் திகில் விரும்பிகளுக்கு ஏத்த கதை அம்சமாக உள்ளது.

சதீஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் சட்டம் என் கையில்

Trending News