சனிக்கிழமை, ஜனவரி 4, 2025

விஜய் தலைமுடிக்கு என்ன ஆச்சு? சதீஷ் போட்ட போட்டோவால் இணையத்தில் சலசலப்பு

தளபதி விஜய் தமிழ் சினிமாவின் உச்ச நடிகராகவும் அதிக வசூல் நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தாலும் இன்னமும் அவர் உரித்து மற்ற நடிகர்களின் ரசிகர்கள் வைக்கும் குற்றச்சாட்டு என்னவென்றால் எப்போதுமே விக் வைத்து நடிக்கிறார் என்பதுதான்.

சினிமாவில் உள்ள பல நடிகர்களும் அதைத்தான் செய்கிறார்கள். ஆனால் விஜய்க்கு மட்டும் ஏன் இந்த பிரச்சனை என்பது தெரியவில்லை. உண்மையிலேயே தளபதி விஜய்க்கு தலையில் முடி இருக்கிறதா இல்லையா என்ற பிரச்சனை ஒரு முடிவுக்கு வராது போல.

சும்மா கிடந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி என்ற கதையாக காமெடி நடிகர் சதீஷ் தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் விஜயுடன் காரில் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளார். அந்த புகைப்படத்தில் தளபதி விஜய் மொட்டையடித்து முடி வளர்ந்தது போன்ற கெட்டப்பில் இருக்கிறார்.

தளபதி விஜய் தெறி படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக மொட்டை போட்டார் என்பது தெரிந்தது. அதைத்தொடர்ந்து கேப் இல்லாமல் பைரவா என்ற படத்தில் நடித்ததால் அந்த படம் முழுக்க அவருக்கு விக் பயன்படுத்தப்பட்டது.

அந்த படத்திற்கு மற்ற ரசிகர்கள் விஜய்யை பலமாக சமூக வலைதளங்களில் கிண்டல் செய்த விஜய்யின் இமேஜை டேமேஜ் செய்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது இந்த புகைப்படமும் விஜய்யை கிண்டல் செய்வதற்கு எடுத்தது போலவே இருக்கிறது.

sathish vijay
sathish vijay

இந்த முடி பிரச்சனை எப்போது முடிவுக்கு வரும் என்பது புரியாத புதிர்தான். விஜயை பிடிக்காதவர்கள் பலரும் பெரும்பாலும் அவரைத் தாக்கி பேச வேண்டும் என்றால் அவருடைய தலை முடியை குறி வைத்துத்தான் பேசி வருகிறார்கள்.

சதீஷ் நல்ல விதமாக ஒரு போட்டோவை போட்டு ரசிகர்களிடம் ஆதரவை பெற நினைத்ததில் அது அவருக்கே ட்விஸ்ட் ஆக அமைந்து விட்டது. தளபதி விஜய் காமெடி நடிகர் சதீஷ் பைரவா கத்தி போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Trending News