புதன்கிழமை, ஜனவரி 8, 2025

சத்யராஜ் இயக்கிய ஒரே படம்.. அதோடு இனி அந்த பக்கமே போக மாட்டேன் என கும்பிடு போட்ட பரிதாபம்

சத்யராஜ் ஒரு நடிகராக, ஒரு தயாரிப்பாளராக நமக்கு தெரியும். ஆனால் சத்யராஜ் இயக்கிய ஒரே ஒரு தமிழ்படம் உள்ளது. அந்த படம் தான் வில்லாதி வில்லன். இந்த படத்தில் நக்மா, ராதிகா, கவுண்டமணி, மணிவண்ணன் போன்ற பிரபலங்களும் நடித்திருப்பார்கள். வித்யாசாகர் இந்த படத்துக்கு இசை அமைத்திருப்பார்.

1995ல் வெளிவந்த இந்த படம் மக்கள் மத்தியில் மிகவும் எதிர்பார்க்கப்பட்டது. இதில் முக்கியமாக சத்யராஜ் இயக்கி, கதை எழுதி, நடித்துஇருந்தார். இந்த படத்தை இந்தி மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ஆனால் இந்த படம் மிகபெரிய தோல்வி படம். இதற்குப் பின்னர் ஏன் சத்யராஜ் படங்கள் ஏதும் ஏற்கவில்லை என்பது தெரியவில்லை. ஆனால் தற்பொழுது தயாரிப்பாளர் சித்ரா லட்சிமணன் அவருடைய யு டியுப் சேனலில் படம் மிகபெரிய வெற்றி என கலர் கலராக ரீல் விடுகிறார். மேலும் அந்த தயாரிப்பாளரிடமே பேசினாராம்.

இந்த படத்தின் தோல்வியை சத்யராஜே அன்றைய காலகட்டத்தில் கூறினார். ஆனால் இப்படி எதுக்கு கதையை கிளப்பி விடுகிறார் என்று தெரியவில்லை. அந்த படத்தின் தோல்வியை பார்த்து இனி வாழ்நாளில் இனி படத்தை இயக்கவே மாட்டேன் என சத்யராஜ் முடிவு பண்ணினார்.

வில்லத்தனத்தில் ஆரம்பித்து கதாநாயகனாக மாறி தற்போது குணசித்திர நடிகராக வலம் வந்து கொண்டு இருக்கிறார். அதிலும் பல வெற்றிகளை பார்த்துவிட்டார் சத்யராஜ். இனிமேலும் இயக்கத்துக்கு எப்படி வருவார் மனுஷன்.

தனது மகனையும் எப்படியாவது ஒரு பெரிய நடிகனாக மாற்றிவிட வேண்டும் என்று இவர் தயாரிப்பில் மூன்று படங்கள் வெளியிட்டார் சத்யராஜ். ஒருவேளை சிபிராஜை வைத்து இயக்க போகிறாரோ என்னவோ.

Trending News