திங்கட்கிழமை, ஜனவரி 13, 2025

விஜயா பேயாட்டம் ஆடியதால் தற்கொலை செய்யும் சத்யா.. ரோகிணியை வச்சு செய்யப் போகும் முத்துவின் ஆட்டம்

Sirakadikkum Asai Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற சிறகடிக்கும் ஆசை சீரியலில், விஜயாவுக்கு சும்மாவே மீனாவையும் குடும்பத்தையும் கண்டாலே பிடிக்காது. அப்படிப்பட்ட விஜயாவுக்கு, சத்யா திருடின விஷயம் தெரிந்ததால் இதுதான் சான்ஸ் என்று மீனாவின் வீட்டிற்கு சென்று சத்யாவை செருப்பால அடித்து அவமானப்படுத்திவிட்டு வந்தார். அத்துடன் வீட்டிற்கு வந்து அண்ணாமலையிடம் போட்டுக் கொடுக்கும் விதமாக நல்ல பத்த வைத்துவிட்டார்.

இந்த அண்ணாமலையும், விஜயா சொல்வது சரிதான் என்பதற்கு ஏற்ப கோபத்துடனே இருக்கிறார். இந்த நேரத்தில் வீட்டிற்கு வந்த முத்துக்கு விஷயம் எதுவும் தெரியாததால் எதார்த்தமாக திருப்பதிக்கு போயிட்டு வந்து லட்டை அப்பாவிடம் கொடுக்கிறார். ஆனால் அண்ணாமலை அதை வாங்க மறுத்துவிட்டு கோபத்துடன் பார்க்கிறார். பிறகு அங்கே இருந்த மனோஜ் அந்த வீடியோவை முத்துவிடம் காட்டிவிடுகிறார்.

அத்துடன் விஜயா மற்றும் அனைவரும் சேர்ந்து மீனா குடும்பத்தை தவறாக பேசி விடுகிறார்கள். உடனே முத்து, மீனா இப்பொழுது எங்கே என்று விஜயாவிடம் கேட்கிறார். அதற்கு விஜயா, மீனா அம்மா வீட்டில் இருக்கிறாள். நீ போய் பார்த்து பேசி என்னமோ பண்ணு, ஆனால் இந்த வீட்டுக்கு மட்டும் கூட்டிட்டு வந்து விடாதே.

நான் அவளை மருமகளாகவும் சரி, வீட்டிலும் சரி அனுமதிக்க மாட்டேன் என்று பிடிவாதமாக சொல்லிவிட்டார். உடனே முத்து, மீனாவை பார்ப்பதற்கு வீட்டிற்கு போகிறார். இதற்கு இடையில் சத்யா, நான் திருடின விஷயம் எல்லாம் மாமாவுக்கு தெரியும். அப்பொழுதுதான் ஒரு சண்டையில் என்னுடைய கையை உடைத்தார் என்ற எல்லா உண்மையும் சொல்கிறார்.

இதை கேட்டதும் மீனாவின் அம்மா மாப்பிளை ரொம்ப நல்லவர், நான் கூட உன் கையை உடைத்ததற்கு அவரை தவறாக பேசிவிட்டேன் என்று வருத்தப்பட்டு பேசுகிறார். மீனாவும் முத்துவை நான் சரியாக புரிந்து கொள்ள வேண்டும் என்று வருத்தப்படுகிறார். அப்பொழுது அங்கே வந்த முத்துவை பார்த்ததும் மீனா மன்னிப்பு கேட்டு மொத்த குடும்பமும் முத்துவிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.

உடனே முத்து அவர்களை சமாதானப்படுத்தி விட்டு சத்யாவை எங்கே என்று தேடுகிறார்கள். அப்பொழுது சத்யா மாடியில் இருக்கிறார் என்பதற்காக மொத்த குடும்பமும் மாடிக்கு போகிறார்கள். மாடியில் இருக்கும் சத்தியா, குடும்பத்தை பார்த்ததும் அவமானத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்வதற்காக மொட்டை மாடியில் நின்று கொண்டு நான் எல்லாத்துக்கும் கஷ்டத்தை கொடுத்து விட்டேன்.

என்னால் தான் உங்களுக்கு மிகப்பெரிய தொந்தரவு நான் உயிரோடு வாழவே விரும்பவில்லை என்று தற்கொலை செய்யப் போவதாக கூறுகிறார். ஆனால் முத்து, சத்யாவை சமாதானப்படுத்தி காப்பாற்றி விடுவார். இதன் பிறகு இந்த போன் யார் கையில் கிடைத்தது அந்த வீடியோவை யார் வெளியிட்டார் என்ற விஷயத்தை கண்டுபிடிக்கும் விதமாக முத்து களத்தில் இறங்கப் போகிறார்.

அப்பொழுது சத்தியா, சிட்டி பார்த்து என்னிடம் நீங்கள் தான் வீடியோவை வெளியிட்டீர்கள் என்று சொன்னார் என்பதையும் சொல்ல போறார். பிறகு சிட்டியை பார்த்து நீ தான் இந்த வீடியோவை வெளியிட்டியா என்று முத்து அவருடைய பாஷையில் அடித்து உதைத்து கேட்கப் போகிறார். அதன் பிறகு சிட்டி, உங்க வீட்டில் இருக்கும் ரோகிணி தான் எனக்கு உன்னிடம் இருக்கும் வீடியோவை கொடுத்தார் என்ற விஷயத்தை போட்டு உடைக்க போகிறார்.

அதன் பிறகு முத்து, ரோகினி ஏன் உன்னிடம் கொடுக்க வேண்டும் என்று கேட்கும் பொழுது ரோகினையே பிளாக்மெயில் பண்ணும் PA பற்றிய விஷயங்கள் வெளிய வரப் போகிறது. இப்படி அடுக்கடுக்காக ரோகிணி பற்றிய விஷயங்களை முத்து தெரிந்து கொண்டு ரோகினியை கொஞ்சம் கொஞ்சமாக வச்சு செய்யப் போகிறார். முத்து மற்றும் மீனாவின் வாழ்க்கையை காலி பண்ண நினைத்த ரோகினிக்கு இனி தான் மிகப்பெரிய தண்டனை கிடைக்கப் போகிறது.

Trending News