Biggboss 8: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இந்த வார இறுதியில் மக்களிடம் படு மொக்கை வாங்கினார் அர்ணவ். அவர் பேசப் பேச கைதட்டலை கொடுத்து வாயை அடைத்தனர் ஆடியன்ஸ்.
ஆனால் அந்த கைதட்டல் எதற்கு என்று தெரியாமல் அவர் முழித்ததுதான் பரிதாபமாக இருந்தது. அதை தொடர்ந்து தற்போது பிக்பாஸ் வீட்டுக்குள் சத்யா ஜெஃப்ரி ஆகியோர் ஜோடியாக வந்துள்ளனர்.
இதை பார்த்ததுமே சம்பவம் இருக்கு என்றுதான் தோன்றியது. அதன் படி தற்போது அவர்கள் இருவரும் அர்ணவை முடிந்த அளவு வச்சு செய்து விட்டனர்.
அவரும் இவர்களை எப்படி சமாளிப்பது என தெரியாமல் மக்கள் மனதில் இருக்கும் கேள்வியை தான் நான் கேட்டேன் எனக்கு தனியாக கமெண்ட்ஸ், மெசேஜ் எல்லாம் வந்தது என சமாளித்தார்.
சத்யா ஜெஃப்ரியிடம் சிக்கிய ஆணழகன்
ஆனாலும் சத்யா ஜெஃப்ரி இருவரும் கலாய்த்து தள்ளிவிட்டார்கள். இந்த அவமானம் உனக்கு தேவையா என்றுதான் அர்ணவை பார்க்கும் போது நமக்கு தோன்றுகிறது.
இது பத்தாதுன்னு விஷாலிடம் தேவையில்லாமல் பேசி மூக்குடைபப்பட்டார். அந்த பக்கம் பார்த்தால் ரியாவிடம் வம்பு இழுத்து பல்பு வாங்கினார்.
இப்படி போகும் பக்கம் எல்லாம் ஹீரோயிசம் செய்கிறேன் என்று கோமாளி ஆனது தான் மிச்சம். இதற்கு இவர் பிக் பாஸ் வீட்டுக்குள் மீண்டும் வராமலேயே இருந்திருக்கலாம்.