ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 29, 2024

350 கோடி பட்ஜெட் படத்தில் நடிக்கும் சத்யராஜ்.. கட்டப்பாவை மிஞ்சும் கதாபாத்திரமாம்

தமிழ் சினிமாவில் வில்லனாக அறிமுகமாகி, மெயின் வில்லனாக உயர்ந்து, துணை நடிகராகி, கதாநாயகனாகச் கலக்கி, இப்போது குணச்சித்திர நடிகராக ஹந்தி உட்பட பல மொழிகளில் கலக்கி கொண்டிருக்கும் நடிகர் சத்யராஜ்.

ராதா கிருஷ்ணாகுமார் இயக்கத்தில் பாகுபலி நடிகர் பிரபாஸ், பீஸ்ட் படத்தின் கதாநாயகி பூஜா ஹெக்டே இணைந்து நடித்தவரும் ராதே ஷ்யாம் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க காதல் படமாக எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் யுவி கிரியேஷன்ஸ் மற்றும் கோபி கிருஷ்ணா மூவிஸ் தயாரித்துள்ளது. ராதே ஷ்யாம் படம் 350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டுள்ளது. ராதே ஷ்யாம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரைலர் அண்மையில் வெளியாகி வைரல் ஆனது.

டிரைலர் வெளியான 24 மணி நேரத்தில் அனைத்து மொழிகளிலும் 64 மில்லியன் பார்வைகளைப் பெற்று புதிய சாதனை படைத்துள்ளது. இதன் மூலம் பாகுபலி 2 டிரைலர் 24 மணி நேரத்தில் படைத்த சாதனையை ராதே ஷ்யாம் படம் முறியடித்தது.

பாகுபலி படத்தில் கட்டப்பாவாக கலக்கிய சத்யராஜ் ராதே ஷ்யாம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சாமியார் வேடத்தில் நடித்துள்ளார். பாகுபலியை போலவே இப்படத்திலும் சத்யராஜுக்கு வலிமையான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கும் என பேசப்படுகிறது. சத்யராஜ் ஒரு சிறு கதாபாத்திரமாக இருந்தாலும் அதில் கனகச்சிதமாக நடிப்பார்.

அதேபோல் ராதே ஷ்யாம் படத்தில் சாமியாராக நடித்துள்ள சத்யராஜ் கதாபாத்திரமும் பாகுபலி கட்டப்பா அளவுக்கு பேசப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ராதே ஷியாம் திரைப்படம் அடுத்தாண்டு ஜனவரி 14 ஆம் தேதி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு உலக முழுவதும் திரையரங்கில் வெளியாகும் என் படக்குழு அறிவித்துள்ளது.

Trending News