வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

சத்யராஜ் நடித்து உயிரை விட்ட 7 முக்கிய படங்கள்..

 தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் ஹீரோக்கள் வில்லன்களை மட்டுமே அடித்துக் கொள்வார்கள். ஆனால் ஒரு சில காலத்திற்குப் பிறகுதான் ஹீரோக்கள் படங்களில் அடி வாங்குவதும் படத்தில் கதாநாயகி மற்றும் ஏதாவது ஒரு நபருக்காக உயிரை விடுவது போன்ற காட்சியிலும் படத்தில் இடம்பெற்றன. சத்யராஜ் இறக்கும் காட்சியில் நடித்த படங்களைப் பற்றி பார்ப்போம்.

#1. மந்திரப் புன்னகை 1986

மந்திரப் புன்னகை இது 1986 சத்யராஜ் மற்றும் நதியா நடித்த காதல் சித்திரம். இத்திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது. இப்படத்தின் பாடல்கள் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

#2. ஆளப்பிறந்தவன் 1987

ஆளப்பிறந்தவன் இது 1987 இல் சத்யராஜ் மற்றும் அம்பிகா நடித்த திரைப்படம். இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார். இதில் சத்யராஜ் தனது திறமையை நன்கு வெளிப்படுத்தி இருப்பார்.

#3. மக்கள் என் பக்கம் 1987

மக்கள் என் பக்கம் இது 1987 இல் சத்யராஜ், அம்பிகா, ராஜேஷ், நாகேஷ் மற்றும் பலர் நடித்த திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் மலையாளத்தில் வெளியான ராஜாவின்டே மகன் என்ற படத்தை தழுவியது. இத்திரைப்படம் அரசியல் கருத்தை மையமாகக் கொண்ட திரைப்படமாகும்.

#4. வேதம் புதிது 1987

வேதம் புதிது இது 1987 இல் சத்யராஜ் அமலா, ராஜா ஆர்யா நடித்த திரைப்படம்.  இத்திரைப்படம் மக்கள் மத்தியில் சத்யராஜ்ஜின் நடிப்பை பெரிதும் பேச வைத்த படம் ஆகும். காரணம் படத்தில் ஒரு சிறுவன் ஒரு காட்சியில் சத்யராஜிடம் நான் கரை ஏறி விட்டேன் நீங்கள் எப்போது ஏற போகிறீர்கள் என்று கேட்பான் அப்போது சத்யராஜ் அவருடைய நடிப்பு திறமையை மிகவும் அழகாக வெளிப்படுத்தி இருப்பார்.

#5. அன்னக்கிளி சொன்ன கதை 1989

அன்னக்கிளி சொன்ன கதை தமிழ் ஆக்சன் திரில்லர் மூவி ஆகும். இதில் சத்யராஜ், சுதா ராணி, மலேசியா வாசுதேவன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

#6. தாய்நாடு 1989

தாய்நாடு இத்திரைப்படம் 1989 சத்யராஜ் இரட்டை வேடத்தில் நடித்த திரைப்படம். இத்திரைப்படத்தில் ராதிகா மற்றும் எம்.என்.நம்பியார் நடித்திருப்பது கூடுதல் சிறப்பு.

#7. வேலைகிடச்சிடுச்சு 1990

வேலை கிடைச்சிருச்சு 1990 சத்யராஜ் கௌதமி நடித்த திரைப்படம். இத்திரைப்படத்தில் வேலைக்காக சத்யராஜ் படும்பாடு மிக அழகாக காட்டி இருப்பார்கள்.

#8. அமைதிப்படை 1994

அமைதிப்படை சத்யராஜ் திரைப்பயணத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ஆகும். இன்றைய அரசியல் சூழ்நிலையை அன்றே படத்தில் காட்டி இருப்பது மட்டுமின்றி மிரட்டியிருப்பார் சத்யராஜ். மணிவண்ணனின் அரசியல் காமெடி மிக மிக அற்புதமாக அமைந்தது படத்தின் பிரமாண்ட வெற்றிக்கு வழிவகுத்தது.

#9. உடன்பிறப்பு 1993

உடன்பிறப்பு சத்யராஜ், ரஹ்மான், சுகன்யா, கஸ்தூரி நடித்த வெற்றி திரைப்படமாகும். இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சாமி வருது சாமி வருது என்கிற பாடல் பட்டி தொட்டி எங்கும் ஒலித்தது குறிப்பாக விநாயகர் சதுர்த்தி காலங்களில் ஒலிக்கப்படும் பாடலாக விளங்கியது.

#10. வில்லாதி வில்லன் 1995

வில்லாதி வில்லன் படத்தில் சத்யராஜ் வித்தியாசமான வில்லனாக நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் வரும் கவுண்டமணியின் காமெடி காட்சிகள் மிகவும் ரசிக்கும்படியாக இருக்கும். சத்யராஜ் ஊனமுற்றவராக நடித்திருப்பார். ஆனால் படம் ஓடவில்லை.

#11. சிவசக்தி 1996

சிவசக்தி 1996 சத்யராஜ், பிரபு, ரம்பா நடித்த திரைப்படம். இத்திரைப்படத்தை சுரேஷ் கிருஷ்ணா இயக்கினார். தேவா இசையமைத்திருந்தார். படம் ஓடவில்லை.

#12. சேனாதிபதி 1996

சேனாதிபதி சத்யராஜ், சுகன்யா, சௌந்தர்யா நடித்த ஒரு குடும்பத் திரைப்படம். திரைப்படம் 1996 இல் வெளியானது. சத்யராஜ் இதில் சேனாபதியாக வாழ்ந்தார்.

Trending News