ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

ரஜினி படத்த வெறுத்ததுக்கு இதுதான் காரணம்.. பல நாள் பஞ்சாயத்தை போட்டு உடைத்த கட்டப்பா

Sathyaraj: தமிழ் சினிமாவின் பல நடிகர்களுக்குள் ஏகப்பட்ட பஞ்சாயத்துக்கள் நிலவி வருகிறது. அதில் எல்லோருக்கும் தெரிந்த பஞ்சாயத்து தான் ரஜினி மற்றும் சத்யராஜ் கதை. ரஜினி படங்களில் சத்யராஜ் நடிக்க மாட்டார். ரஜினியே ஆசைப்பட்டு கேட்டும் சத்யராஜ் அவருடைய பட வாய்ப்புகளை மறுத்துவிட்டார்.

நான் ஹீரோவாக நடிக்கும் படத்தில் ரஜினி வில்லனாக நடிப்பாரா என்று சத்யராஜ் கேள்வி எழுப்பினார். இதுபோன்ற பல சம்பவங்களை கடந்த சில வருடங்களாக நாம் கேள்விப்பட்டிருப்போம். சத்யராஜ் மற்றும் ரஜினிகாந்த் மிஸ்டர் பாரத் படத்தை பார்த்தவர்களுக்குத்தான் இந்த கெமிஸ்ட்ரியின் அருமை புரியும்.

சத்யராஜின் நக்கல் மற்றும் ரஜினியின் ஸ்டைல் இரண்டையும் ஒன்றாக திரையில் பார்ப்பதற்கு அருமையான அனுபவமாக இருக்கும். இவர்கள் இருவரும் இவ்வளவு காலங்கள் சேர்ந்து நடிக்காமல் இருப்பது தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தான் இழப்பு.

சத்யராஜ் மற்றும் ரஜினி இருவருக்கும் இடையே மனக்கசப்பு இருப்பதால்தான் இவர்கள் இருவரும் இணைந்து படம் பண்ணுவதில்லை என பல செய்திகள் வெளியாகிவிட்டது. தற்போது பல வருடங்கள் கழித்து அந்த செய்திகளுக்கான விளக்கத்தை கொடுத்திருக்கிறார் சத்யராஜ்.

பல நாள் பஞ்சாயத்தை போட்டு உடைத்த கட்டப்பா

ரஜினி படங்களில் நீங்கள் ஏன் நடிப்பதில்லை என சமீபத்திய பேட்டி ஒன்றில் சத்யராஜிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சத்யராஜ் தனக்கும் ரஜினிக்கும் இடையே எந்தவித பிரச்சனையும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார்.

ரஜினி படங்களில் என்னை நடிப்பதற்காக கேட்டவர்கள் கொடுத்த கேரக்டர்களில் எனக்கு திருப்தி இல்லாததுதான் நான் அவருடன் இணையாமல் இருப்பதற்கு காரணம். எந்திரன் படத்தில் ப்ரொபசர் கேரக்டர், சிவாஜி படத்தில் பழைய நடிகர் சுமன் பண்ணிய கேரக்டர் இரண்டுமே எனக்கு செட்டாகவில்லை.

இதனால் தான் இந்த படங்களில் நடிக்கும் வாய்ப்பை நான் மறுத்து விட்டேன் என சத்யராஜ் சொல்லி இருக்கிறார். அது மட்டும் இல்லாமல் கூலி படத்தில் நீங்கள் ரஜினியுடன் இணைந்து ? நடிக்கிறீர்களா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதை பட குழு தான் அறிவிக்க வேண்டும் என சூசகமாக பதில் சொல்லி இருக்கிறார் சத்யராஜ்.

கூலி படத்தில் மட்டும் லோகேஷ் கனகராஜ் சத்யராஜ் நடிக்க வைத்து விட்டாள் தமிழ் சினிமா ரசிகர்கள் இவ்வளவு நாள் மிஸ் பண்ணிய ஒரு சூப்பர் காம்போவை வெள்ளி திரையில் பார்த்து ரசிக்கலாம்.

Trending News