வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

சத்யராஜ் சாமிய பழித்ததால் தான் அவங்க மனைவிக்கு இப்படி ஆச்சு.. லெஃப்ட் ஹேண்டில் டீல் பண்ணிய கட்டப்பா!

Sathyaraj: நடிகர் சத்யராஜ் எப்போதுமே நக்கல் பேர்வழி என்பது எல்லோருக்குமே தெரியும். அவரிடம் பேசும் போதும், பேட்டி எடுக்கும் போதும் எப்போதுமே உஷாராக தான் இருப்பார்கள். எந்த நேரம் எப்படி பதில் சொல்வார், எப்படி கேள்வி கேட்பார் என யாராலுமே கணிக்க முடியாது.

நடிப்பு மட்டுமில்லாமல் சமூகப் பிரச்சனைகள் பலவற்றிற்கும் சத்யராஜ் தைரியமாக குரல் கொடுக்கக் கூடியவர். மேலும் பெரியாரின் கொள்கையையும் பின்பற்றக் கூடியவர். சமீபத்தில் சத்யராஜின் மனைவி நான்கு வருடங்களாக கோமாவில் இருப்பதாக அவருடைய மகள் திவ்யா பகிர்ந்திருந்தார்.

அந்த சமயத்தில் பலரும் சத்யராஜுக்கு தங்களுடைய ஆதரவை தெரிவித்து வந்தார்கள். ஒரு சிலரோ சத்யராஜ் பெரியார் கொள்கையை பின்பற்றுகிறேன் என்ற பெயரில் கடவுளை கிண்டல் பண்ணினார் அதனால் தான் அவர் மனைவிக்கு இப்படி ஆயிற்று என இஷ்டத்திற்கு விமர்சனங்களை வைத்தார்கள்.

இதற்கு வழக்கமான பாணியில் பதில் சொல்லி இருக்கிறார் சத்யராஜ். நான் சாமி கும்பிடாததால் தான் என் மனைவிக்கு இப்படி ஆயிடுச்சி என்று பேசுறீங்க. அப்போ சாமி கும்பிடுறவங்க வீட்ல எல்லாம் பிரச்சனையே நடக்கிறது இல்லையா.

சாமி கும்பிடுகிறவர்கள் வீட்டில யாருக்கும் காய்ச்சல் வருவது இல்லையா. சாமி கும்பிடுவாங்க வீட்டுல யாருமே தற்கொலை பண்ணுகிறது இல்லையா. சாமி கும்பிட காரில் போன குடும்பம் காரோடு விபத்தில் சிக்கி இறப்பதெல்லாம் நடக்க தானே செய்கிறது என சாட்டையில் அடித்தபடி பதில் சொல்லி இருக்கிறார்.

Trending News